சினிமா

கதை திருட்டுக்கு துணை போன எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

வெளியில் தெரியாமல் அமைதியான தென்றல்போல் நடந்து வந்த எழுத்தாளர் சங்கம் சமீபகாலமாக நீதிமன்றம் காவல்துறை ஊடகங்கள் என்று அடிபடுகிறதே என்று மூத்த உறுப்பினர்கள் பலரிடம் விசாரித்ததில் பெருமூச்சுடன் தங்கள் வேதனையை பகிர்ந்து கொண்டார்கள். எழுத்தாளர்கள் அல்லாதவர்கள் இந்த சங்கத்தை கைப்பற்றி இயக்குனர் சங்கம் PART 2 வாக நடத்துவதுதான் அடிப்படைக் காரணம்.

செயலாளர் மனோஜ்குமார்


தற்பொழுது உள்ள தலைவர் கே.பாக்கியராஜ் கூட தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. நாமினேட் செய்யப்பட்டவர்தான். செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் ரமேஷ் கண்ணா இருவரும் எழுத்தாளர்களே அல்ல. பெப்சித் தலைவரும் இங்கு துணைத்தலைவருமான ஆர்.கே.செல்வமணியும் எழுத்தாளர் அல்ல.
துணைச்செயலாளரான சண்முக சுந்தரம் அண்ணாமலை என்ற ஒரே ஒரு படத்தின் எழுத்தாளர் (அதுவும் பலரின் கைவண்ணம் அவியல் போன்றது). 20 வருடமாகி வேறு எதுவும் எழுதவில்லை சங்கத்தை நம்பியே வாழ்பவர். சி.ரங்கநாதன் எல்லோராலும் ச்சீ..சீ என்று வெறுக்கப்படுபவர் கதாநாயகனாக, இயக்குனராக தோல்விகளோடு மூன்று வேளையும் சங்கப்பணத்தில் குடும்பம் நடத்துபவர். பிரபாகரன் இவரும் தோல்வி இயக்குனர். ஓரளவு வசனகர்த்தாவாக வெற்றி பெற்றாலும் நயவஞ்சகத்தின் மொத்த உருவம் SILENT KILLER. தற்பொழுது சேரநாட்டில் கரை ஒதுங்கியவர். மதுரைத் தங்கம் எந்தப் படமும் வசனம் எழுதாமல் பேசும் படத்தில் வேலை செய்தவர். கடைசியாக ஆஸ்கார் மூவிஸை காலி செய்துவிட்டு சங்கத்தில் ஒதுங்கியவர். எல்லாமேடையிலும் முந்திரிக் கொட்டையாக குரல் கொடுப்பவர். இவர்கள்தான் நிர்வாகிகள்.

தற்பொழுது உள்ள செயலாளர் ஏதோ இந்த நாட்டின் ஜனாதிபதி போல் பதவிக்கு வந்த நாள் முதல் எல்லோரிடம் சண்டை வம்பு வழக்கு நீண்ட கால மேனேஜர் ராஜன் அவமானப்படுத்தியதில் அவர் ஓடியே போய்விட்டார். சரி விஷயத்திற்கு வருவோம். வேலைக்காரன் கதை சண்முக சுந்தரம் மகன் சக்கரவர்த்தி மூலம் போனது என்று உறுதி செய்தும் தந்திரமாக நடவடிக்கை எடுக்காமல் சதி செய்து விட்டனர். கத்தி படத்தின் தலைவிதியும் இப்படித்தான்.

சர்க்கார் படக்கதை விஷயத்தில் வருண் ராஜேந்திரன் புகார் செய்ததும் சி.ரங்கநாதன் ஓடோடி முருகதாஸிடம் SCRIPT ஐ வாங்கி வருகிறார். பிறகு எப்படி அவர் வருணுக்கு ஆதரவாக செயல்படுவார். மேலும் மனோஜ்குமார் தீர்மானத்தில் கையெழுத்திட்டு பின் கடிதம் கொடுத்து இரண்டும் ஒரு கதையல்ல என்கிறார்.


செயற்குழு முடிந்ததும் டி.கே.சண்முகசுந்தரம் இரண்டும் வேறுகதை என்று கடிதம் கொடுக்கிறார். ரமேஷ்கண்ணாவின் மகன் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனர். அவர் நாகரீகமாக ஒதுங்காமல் இரண்டும் வேறு கதை என்று வாதிடுகிறார். கழுவிய மீனில் நழுவிய மீனான கே.பிரபாகரன் முருகதாஸ்க்கு ஆதரவாக கடிதம் கொடுக்கிறார்.
எப்பொழுதுமே தொழிலாளர் நலனில் அக்கறை காட்டாத RKSம் முருகதாஸ்க்கு ஆதரவு காட்டுகிறார். சங்கப்பிரச்சனையில் பெப்சி தலையிட்டு தீர்த்து வைத்திருக்கலாமே கோர்ட்டுக்கு சென்றிருக்க வேண்டாமே. இவரின் திட்டத்தில் தான் டிரஸ்ட் விஷயமும் உலகமே நாறியது. தன்னை எதிர்ப்பவர்களை சதி செய்து விரட்டுவது இவர் பழக்கம். மேலும் சங்கத்தை பெப்சி ஒதுக்கி வைத்தபோதும் சங்கத்தை லெட்டர் பேடு சங்கம் என்று அமீர் சொன்ன போதும் எதிர்த்து குரல் கொடுக்காத இவர்களா சங்கத்தை தாங்கிப் பிடிக்கப் போகிறார்கள். அதுமட்டுமல்ல கதைப் பிரச்சனையில் போராடும் இளம் கதாசிரியர்கள், இளம் இயக்குனர்களை சலுகைக் கட்டணம் அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்று வாதாடி தனக்கு ஆதரவான இயக்குனர் சங்க உறுப்பினர்களை எழுத்தாளர் சங்கத்தில் மெம்பராக ஆக்கிய இவர் புகார் கொடுத்தால் 10,000 டிடி கொடுக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்.
ஏ.வெங்கடேஷ், சாய்ரமணி, பேரரசு போன்றோர் போராடியதால் தான் வருணுக்கு நியாயம் கிடைத்தது. எனவே ஒரு எழுத்தாளனுக்கு துரோகம் செய்த RKS, TKS, மனோஜ்குமார், ரமேஷ்கண்ணா, ரி.பிரபாகரன் போன்றோர் உடன் பதவி விலக வேண்டும்.
மேலும் இவர்கள் கதைப்பதிவில் கையெழுத்திடக் கூடாது எழுத்தாளர் சங்கத்தின் 5 ஆண்டுகள் போட்டியிட தடைவிதிக்க பொதுக்குழுவை உடனே கூட்ட வேண்டும். இனியாவது எழுத்துலகில் சாதித்தவர்கள் மட்டுமே சங்கப் பொறுப்பிற்கு வரவேண்டும் என்று மூத்த எழுத்தாளர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button