சினிமா

கனவு காணும் நாயகி “யார் அவள்” இசை வீடியோ வெளியீடு

செவன் ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில்,  சீதாராமன் முகுந்தன் இயக்கிய ‘யார் அவள்’ இசை வீடியோவை சரிகமா ஒரிஜினல்ஸ் நிறுவனம் இன்று வெளியிடவுள்ளது.

மன அமைதியையும் மகிழ்ச்சியையும் பற்றி கனவு காணும் ஒரு சாதாரணப் பெண்ணின்  பயணம் தான் ‘யார் அவள்’. இளையராஜாவின் இசையமைப்பில் ‘அம்மா கணக்கு’ படத்தின் மூலம் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீநிஷா ஜெயசீலன் இந்தப் பாடலை பாடியுள்ளார்.

மிஸ் தமிழ்நாடு 2021 மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2021 பட்டங்கள் வென்ற  தச்சானி இந்த பாடலில் நடித்துள்ளார். ஆத்மார்த்தமான இந்த பாடலுக்கு ஏ கே சசிதரன் இசையமைத்துள்ளார். வி.மணிகண்டனுடன் விளம்பரங்களில் அசோசியேட்டாக இருக்கும் லெனின் இந்தப் பாடலின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பாடலுக்கான நடனத்தை சாலமன் வடிவமைத்துள்ளார். பாடலின் வரிகளை பகவதி பி கே எழுதியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button