மொழியை( இந்தி ) யார் வேண்டுமானாலும் கற்கலாம்.! “போலாமா ஊர்கோலம்” இசை வெளியீட்டு விழாவில் – தயாரிப்பாளர் கே. ராஜன்
“போலாமா ஊர்கோலம்” இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஒரு மொழியை யார் வேண்டுமானாலும் மனம் விரும்பி கற்கலாம் என்று பேசினார். சமீபத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில் கே. ராஜன் பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பேசுகையில் போலாமா ஊர்கோலம்’ என்ற தலைப்பு தமிழில் இருப்பதால் வரவேற்கிறேன். இந்தப்படத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 20 கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடித்திருக்கிறார்கள். வயது என்பது வெறும் எண் மட்டும் தான். இவர்கள் அனைவரும் வயதாகாத இளைஞர்கள். கால்பந்து விளையாட வேண்டும் என்றால் மனதில் ஒழுக்கம் இருக்க வேண்டும் உடலில் உறுதி இருக்க வேண்டும். இங்கு முன்னாள் விளையாட்டு வீரர் முகமது சம்ஷத் பேசுகையில், ‘கால்பந்து விளையாட்டை வாழ்க்கையின் பல்வேறு நிலைகளுடன் ஒப்பிட்டுப் பேசினார். அற்புதமான பேச்சு.’ கால்பந்தாட்டம் அல்ல. கால் போராட்டம் என்று குறிப்பிடலாம். வாழ்க்கையின் போராட்டம்.
படத்தின் முன்னோட்டம் நேர்த்தியாக இருந்தது. இதனை உருவாக்கிய இயக்குநருக்கும், படக்குழுவினரும் நன்றி. படத்தில் நடித்த நடிகர்கள் வடசென்னைத் தமிழில் பேசி நடித்திருப்பது வரவேற்பைப் பெறும். மனம் விரும்பி ஒரு மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம். புரட்சிக்கவி மகாகவி பாரதியார் ஒன்பது மொழிகளைக் கற்றார். அதன் பிறகுதான் அவர் ‘யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார். இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மற்றும் பின்னணி இசை அமைப்பாளர் இருவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.” என்றார்.