இந்தியா

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் : பரிசீலிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படம் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய வழக்கில் மத்திய அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து நேதாஜி இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கினார். சுதந்திரத்துக்குப் பாடுபட்ட அவருக்கு உரிய மரியாதையை அளிக்க அரசு தவறி விட்டது.

அவரது தியாகம் குறித்து தற்போதைய தலைமுறையினர் எதுவும் அறிந்திருக்கவில்லை. இதனால்தான் நேதாஜி பற்றி அறிய ரூபாய் நோட்டுகளில் அவரது படம் இடம்பெற வேண்டும் என்று மனு செய்தேன்.

நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தரேஷ், ஆனந்தி அமர்வின் விசாரணைக்கு வந்தது.

‘பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், உள்துறை செயலர், நிதித்துறை செயலர், மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வழக்கை முடித்து வைக்கிறோம்‘ என்று உத்தரவிட்டனர்.

நேதாஜி விமானவிபத்தில் இறந்து விட்டார் என்று நம்பப்பட்டாலும். அவரது மறைவு பற்றி பல்வேறு வாதங்கள் நிலவுகின்றன. நேதாஜி மறைவு பற்றி அதன் ரகசியங்கள் பற்றி பல நூல்கள் வெளிவந்துள்ளன.

1966-ல் திரைப்படமாக வங்காள மொழியில் சுபாஷ் சந்திரா என்ற பெயரில் பிஜூஷ் பாஸு இயக்கத்தில் வெளிவந்தது. 2004ம் ஆண்டு இயக்குநர் ஷியாம் பெனகல், Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero என்று ஒரு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ஒன்றை எடுத்துள்ளார்.

2019-ல் கும்நாமி என்ற வங்காள படம் ஸ்ரீஜித் முகர்ஜி என்பாரால் எடுக்கப்பட்டது, இது நேதாஜி மரணத்தின் பின்னணியில் உள்ள விவகாரங்களை அலசும் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button