அரக்கோணம் தொகுதியும்… திமுக செண்டிமெண்ட்டும்..!
தமிழக சட்டசபை தேர்தலுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான அரசியல் நகர்வுகளை செய்து வருகிறது.
திமுகவை பொறுத்தவரை பி.கே என்றழைக்கப்படும் நபரின் ஐபேக் டீமை நம்பி களத்தில் இறங்கி இருக்கிறது. வெளியே நாத்தீகம் பேசி வந்தாலும் நேரம், காலம் என செண்டிமெண்ட் பார்க்கத் தவருவதில்லை.
நடைபெற உள்ள 2021 சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என யாரோ கொளுத்தி போட முந்தைய வரலாற்றை திருப்பி பார்த்த திமுக இந்த முறை எப்படியும் தொகுதியை கைப்பற்றி விட வேண்டும் என முனைப்புடன் வேட்பாளரை தேடியது.
இதற்கு காரணம் அரக்கோணம் தனித்தொகுதி பட்டியல் இனத்தவருக்கான ரிசர்வ் தொகுதி. ஏற்கனவே கடந்த 2 முறையும் அங்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வாக இருப்பது சு.ரவி. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., என்பதால் செல்வாக்குக்கும், பணத்திற்கும் குறைவு இருக்காது.
அந்தளவுக்கு செலவு செய்ய வேண்டும், பிரச்சனைகள் வந்தால் எதிர் கொள்ள வேண்டும். கடந்த முறை முதலில் அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்ட பவானி மீண்டும் இந்த முறை முயற்சிக்கிறார். இவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும் இவரது கணவர் வன்னியர் என்பதால் அதை தொகுதி கட்சியினர் ஏற்காமல் எதிர்ப்பு தெரிவித்ததால் இவரை மாற்றிவிட்டு ராஜ்குமார் அல்லது வக்கீல் எழில் இனியன் என்பவரை மாவட்டம் பரிந்துரை செய்தார். அதில் ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தும் கட்சியினரை அரவணைத்து செல்லாத்தால் தோல்வி அடைந்தார்.
இந்த முறை சர்வே எடுத்த ஐபேக் டீமும், கட்சியினர் பலரும் புதியவரை அறிவித்தால் வெற்றிக்கு வாய்ப்பு என கூறியிருக்கிறார்களாம்.
இதன் காரணமாக தொகுதியை சேர்ந்தவரும், ஏற்கனவே 3 முறை சீட் கேட்ட மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் பா.எழில் இனியன் வேட்பாளர் தேர்வில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம் அதே தொகுதிதான் சொந்த ஊர். எந்த கோஷ்டி சிக்கலும் இல்லாமல் இருப்பதோடு சினிமா தயாரிப்பாளராகவும் இருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
அதோடு அரக்கோணம் செண்டிமெண்ட் அந்த தொகுதியில் ஜெயிக்கும் கட்சிதான் ஆட்சியை பிடிக்கும் கட்சியாக இருக்குமாம். 1951 முதல் கடந்த தேர்தல்வரை இந்த செண்டிமெண்ட் வேலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– கோடங்கி