அதிமுக அரசுக்கு எதிராக…அதிமுக MLA தர்ணா
இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினராக ஆளும் அதிமுகவைச் சேர்ந்த மணிகன்டன் இருந்து வருகிறார். இவர் திடீரென பழனிச்சாமி அரசுக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இராமநாதபுரம் நகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தன்னந்தனியாக தர்ணா போராட்டம் செய்தார் .
இராமநாதபுரம் நகர் முழுவதும் வருடக்கணக்கில் பாதாளசாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு ஏராளமான தொற்று நோய்கள் பரவி வரும் சூழலில், இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்தார். இன்று இவருடைய வீட்டின் அருகிலேயே கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசியதால் அதிமுக அரசுக்கு எதிராக தர்ணாவில் இறங்கி விட்டார். இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில்
நகராட்சி அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் தகவலைத் தெரிவித்து இந்த பிரச்சினையை இவரே சரிசெய்து இருக்கலாம். ஏற்கனவே பழனிச்சாமி தனது அமைச்சர் பதவியை பறித்ததால் கோபத்தில் இருந்த மணிகண்டன் அரசுக்கு எதிரான தனது மனநிலையை வெளிப்படுத்தும் விதத்தில் தர்ணா என்கிற பெயரில் விளம்பரப்படுத்திக் கொண்டார். இவரது செயல்பாடு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
இவருக்கு கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தவர் மறைந்த சசிகலாவின் கணவர் நடராஜன் தான். நடராஜன் இறந்த போது அவரது துக்க நிகழ்ச்சியில் அதிமுகவினர் யாரும் கலந்து கொள்ளாத போதும் இவர் இவரது தந்தையை அனுப்பி வைத்து டபுள் கேம் ஆடினார்.
சசிகலா விடுதலையாகி வர இருப்பதால் பழனிச்சாமியிடம் மாவட்டச் செயலாளர் பதவி தரவில்லை என்றால் நான் அணி மாறவும் தயாராக இருக்கிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவா இந்த தர்ணா ?
அதிமுகவில் தேர்தலில் வாய்ப்பு வழங்காவிட்டால் பாஜகவில் இணைய இருக்கிறாரா?
இது பற்றிய செய்திகள் வரும் இதழில் விரிவாக பார்க்கலாம்.