இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் பரமக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் மாவட்டச் செயலாளர் எம்ஏ முனியசாமி தலைமையில் பரமக்குடியில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கடந்த 1 வார் காலமாக ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில்
கட்சி நிர்வாகிகளிடம் ஒன்றியம் வாரியாக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணிகள் பரமக்குடியில் உள்ள கீர்த்தி மகாலில் நடைபெற்றது.
இதில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணை, கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, நாப்கின், போர்வை மசாலா பொருட்கள் , குடி நீர் பாட்டில்கள், பிஸ்கட், ரஸ்க், சோப், பேஸ்ட் பிரஸ், புத்தாடைகள் பாய், தலையணை, கைலி, பெண்களுக்கான நைட்டி, மற்றும் குடும்பத்திற்குத் தலா 10 கிலோ வீதம் 6800 குடும்பத்திற்கு வழங்கும் வகையிலான அரிசி பைகள் பேக் செய்யப்பட்டு 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டு வந்தன.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள்
இராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர் சுந்தரராஜ் முன்னிலையில்
10 சரக்கு வாகனங்களில் ஏற்றப்பட்ட நிவாரணப் பொருட்களை
கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகாமுனியசாமி கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் ஏராளமான கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
வாகனங்களில் எடுத்துச் செல்லப்படும் பொருட்கள் தஞ்சாவூர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதிமுக கட்சியின் துணை பொறுப்பாளர் வைத்தியலிங்கம் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.