அரசியல்

ஸ்டாலின் உயிருக்கு குறி வைக்கிறதா?அதிமுக?

கோவையில் திமுக சார்பில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகி, திமுக தொப்பி அணிந்தபடி பங்கேற்று கேள்வி எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கூட்டத்திலிருந்து அப்பெண்ணை வெளியேற்றிய போது சலசலப்பு ஏற்பட்டது.

திமுக சார்பில் கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேவராயபுரம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தபட்டது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது இடையில் திமுக சின்னம் பொறித்த தொப்பியுடன் அமர்ந்திருந்த பெண் குறுக்கிட்டு தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என கேட்டார்.

நீங்கள் யார் எங்கிருந்து வருகின்றீர்கள் என மு.க.ஸ்டாலின் கேட்டார். தான் ஒரு இந்திய பிரஜை எனக்கும் கேள்வி கேட்க உரிமையுள்ளது என மு.க.ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய அப்பெண் , ஸ்டாலினுடன் வாக்கு வாத்த்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய ஸ்டாலின் ,நீங்க அமைச்சர் எஸ்.பி வேலுமணி சொல்லி வந்திருக்கீங்க என தெரிவித்தார். உடனடியாக திமுகவினர் கூச்சலிடவே அப்பெண் கூட்டத்திலிருந்து வெளியேற்றபட்டார். சம்பவ இடத்தில் இருந்த போலிசார் இருவரையும் வாகனத்தில் ஏற்ற முயன்ற போது அந்த பெண்ணும் அவருடன் வந்தவரும் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்க தனது ஆடையில் மைக் மாட்டியிருந்தனர்.

அப்போது அங்கு இருந்த காவல்துறை அதிகாரி மைக்கை கலட்டுங்க ஆஸ்பத்திரியில் உங்களை சேர்த்தால் தான் வழக்கு பதிவு பண்ணமுடியும் ஆகையால் வண்டியில் ஏறுங்கள் என்று இருவரிடமும் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதேபோல் அந்த பெண்ணும் அமைச்சரிடம் பேசும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இது குறித்து அப்பகுதி மக்களும், திமுகவினரும் கூறுகையில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருக்கிறது. திமுகவினர் என்ன செய்தார்கள் என்று வேண்டுமென்றே பிரச்சனையை உருவாக்குகிறார்கள். திமுகவினர் கூட்டங்களில் மக்கள் கூடுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வம்பை விலை கொடுத்து வாங்குவது அதிமுவினரின் வழக்கம்.

இந்திராகாந்தி, ராஜிவ் காந்தியின் வழியில் ஸ்டாலின் உயிருக்கு குறிவைக்கிறார்கள். திமுகவினர் நடத்தும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் அதிமுக மகளிர் அணி நிர்வாகிக்கு என்ன வேலை?

எதிர்பாராத விதமாக ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு? இதேபோல் தான் ராஜிவ் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது ஒரு பெண் மனித வெடிகுண்டாக மாறி ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார்.

இது போன்ற அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாமல் தடுக்கும் வகையில் எதிர்கட்சித் தலைவருக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

தேர்தல் நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் கட்சி பாகுபாடு பார்க்காமல் நடந்து கொள்வதோடு,அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அந்த பெண் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பூங்கொடி(40) என்பதும், அதிமுக-வின் மாவட்ட மகளிர் அணியின் துணை தலைவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் உடன் வந்தவர் அதிமுகவை சேர்ந்த ராஜன் என்பதும் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button