இராமநாதபுர மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பரமக்குடி நகர் மற்றும் எமனேஸ்வரம், சோமநாதபுரம், சத்தியமூர்த்தி காலனி ஆகிய பகுதிகளில் சௌராஸ்ட்ரா சமூகத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்று நகரின் முக்கிய பகுதியில் சௌராஷ்ட்ரா மேல்நிலைபள்ளி மற்றும் துவக்க பள்ளிகள் சௌராஷ்ட்ரா கல்விக்குழுமத்தின் நிர்வாகத்தால் நிர்வாகிக்கபடுகிறது.
இந்த நிர்வாகத்தினரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் தற்போது நிர்வாகம் செய்துவரும் பொறுப்பாளர்கள் 2018ல் பதவிகாலம் முடிந்தும் முறைப்படி தேர்தல் நடத்தாமல் இன்றுவரை பள்ளியில் சேர்க்கை முதல் அனைத்து வேலைகளிலும் ஊழல் செய்வதாக வி.ஸி.நாகராஜன் தலைமையிலான கல்விக்குழுவினர் தங்கள் தரப்பில் உள்ள நிர்வாகத்தினர் பள்ளியின் நிர்வாக பணிகளை நிர்வகிக்க மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட வேண்டும் என்றும், 2018ல் நடைபெற்ற கல்விக்குழு தேர்தல் முடிவுற்று மேற்படி தேர்தல் மாநில பதிவுத்துறை வழிகாட்டுதலின்படி மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) சிவகங்கை, M.R.நாகராஜன் தலைமையிலான நிர்வாகபட்டியலை பரிசீலனைக்கு ஏற்று 7.10.20 அன்று மாவட்ட பதிவாளர் ரசீது வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் தங்கள் தலைமையிலான நிர்வாகத்தினரை பள்ளி நிர்வாகத்தை நிர்வகிக்க உத்தரவிட கோரி மாவட்ட கல்வி அலுவலரை கண்டித்து அர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சௌராஷ்ட்ரா கல்விக்குழு தலைவர் M.R.நாகராஜன், நர்சரி பள்ளி தாளாளர் N.P.மணிகண்டன், தொடக்க பள்ளி தாளாளர் A.R. தினகரன், பொருளாளர் பரசுராமன் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.