தமிழகம்

இருமடங்கு விலையில் விற்கும் வியாபாரிகள்…! : விரக்தியில் விவசாயிகள்

விவசாயிகளிடம் வழக்கம் போல குறைந்த விலைக்கு காய்கறிகளை பெறும் வியாபாரிகள், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பொதுமக்களிடம் இருமடங்கு விலைக்கு காய்கறிகளை விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின்பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும்சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கம் போல காய்கறிகள்தடையின்றி லாரிகளில் கொண்டுவரப்படும் நிலையில், கொரோனாவைத் தடுக்க அமலில் உள்ளஊரடங்கைப் பயன்படுத்தி, வழக்கத்தை விட இருமடங்கு விலைக்குவியாபாரிகள் காய்கறிகளை விற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து எப்போதும் போல லாரிகள் அதே எண்ணிக்கையில் கோயம்பேட்டிற்கு வருகின்றன. ஒட்டன் சத்திரம் காய்கறிச் சந்தை அடைக்கப்பட்டு விட்டதால் அங்கிருந்தும் கூடுதலாக காய்கறி லாரிகள் சென்னைக்கு திருப்பிவிடப்படுகின்றன. நிலைமை இப்படியிருக்க, லாரிகள் வரத்து குறைவு என்று உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து காய்கறிகளின் விலையை இருமடங்காக உயர்த்துவதாக வியாபாரிகள் மீது புகார் கூறப்படுகின்றது.

இங்கு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு என்பது போல வியாபாரிகள் கதை அளந்து கொண்டிருக்க, கரூர் அருகே ஒரு ஏக்கர் பசுமை குடிலில் விளைவிக்கப்பட்ட 500 கிலோ வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கிச்செல்ல வியாபாரிகள் முன்வராததாலும், 31ந்தேதி வரை ஒட்டன்சத்திரம் சந்தை மூடப்பட்டதாலும், சென்னைக்கு எடுத்துச் செல்ல கூடுதல் வாடகை கேட்டதாலும் பறிக்கப்பட்ட மொத்த வெள்ளரி பிஞ்சுகளையும் குப்பை போல சாலையோரம் கொட்டும் பரிதாப நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார் தண்ணீர் பாய்ச்சி பக்குவம் பார்த்து வளர்த்து வீதியில் கொட்டிய பாவப்பட்ட அந்த விவசாயி.

காய்கறி வியாபாரிகளின் வியாபாரத் தந்திரம் குறித்து விவசாயி ஒருவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களுக்கு எந்த காய்கறிக்கும் கிலோவுக்கு 15 ரூபாய்க்கு மேல் தருவதில்லை என்றும் இது போன்ற நேரத்திலாவது மக்களுக்கு உதவும் வகையில் நியாயமான விலையில் விற்கலாமே என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில்தான் உதவிக்கரங்கள் நீள வேண்டும், எரிகிற வீட்டில் கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் கொள்ளை லாபத்துக்கு காய்கறிகளை விற்பதை தவிர்த்து நெருக்கடியான இந்த தருணத்திலாவது, வியாபாரிகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

ரூபாய் நோட்டு வழியாக கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு மளிகைக் கடைக் காரர் ஒருவர் பணத்தை டெட்டால் கலந்த தண்ணீரில் நனைத்து வாங்கும் நூதன செயலில் இறங்கி உள்ளார்.

தொட்டால் பரவும் கொடிய கிருமியான கொரோனாவிடம் இருந்து தப்பிக்க நம்மவர்கள் செய்யும் விழிப்புணர்வு நடவடிக்கை ஒவ்வொன்றும் விழிதிறக்க செய்கின்றது.

கேரளாவில்வீட்டிற்கு வரும் செய்தி தாள்மூலம் கொரோனா கிருமி பரவிவிடக்கூடாதுஎன்று முன் எச்சரிக்கையாக, செய்தித்தாளைசமையல் கட்டில் பயன்படுத்தும் இடுக்கியால்கவ்வி எடுத்துச்சென்று சூடான அயர்ன் பாக்சால்தேய்த்து செய்திகளை சுட சுட படிக்கும்இந்த உஷார் சேச்சிக்கு நம்மஊரு அண்ணாச்சி ஒன்றும் குறைந்தவரில்லை..!

மளிகைக் கடை நடத்திவரும் ஒருவர் தங்கள் கடைக்கு முன்பாக மஞ்சள் தண்ணீரை ஆறாக ஓடவிட்டுள்ளார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை, கை கால்களை மஞ்சள் வேப்பிலை கலந்த நீரால் நன்றாக கழுவிய பின்னரே வரிசையில் நிற்கவே அனுமதிக்கிறார்.

கடை வாசல் அருகே முகக்கவசத்துடன் உஷாராக அமர்ந்திருக்கும் கடைக்காரர், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு நிற்கும் வாடிக்கையாளர் தரும் ரூபாய் நோட்டுக்களையும் சில்லரைகாசுகளையும், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்று தனது அருகில் உள்ள டெட்டால் மற்றும் சோப்புத்தூள் கலந்த தண்ணீரில் அலசி காயப்போடுகிறார்..!

கைகுட்டையால் முகத்தை கட்டிக் கொண்டு வரும் தனது குட்டி பெண் மூலமாக வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை வழங்குகிறார். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் கைகளை கழுவ வேண்டும், வரிசையில் இடைவெளி விட்டு நின்று வாங்குவதும் கட்டாயம் என்று அறிவித்துள்ள கடைக்காரர், ரூபாய் நோட்டுக்கள் தான் ஏழை பணக்காரர், உள்ளூர்க்காரர், வெளியூர்க்காரர் என பலரது கைகளுக்கும் எளிதாக சென்று வரும் என்பதால் அவற்றை சோப்புத்தூள் கலந்த தண்ணீரில் கழுவி காயவைப்பதாக தெரிவித்தார்.

பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் பண விஷயத்தில் நம்ம அண்ணாச்சி ஆல்வேஸ் உஷார் என்று சொல்ல வைத்திருக்கும் இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி, தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கொடிய கிருமி கொரோனாவின் விபரீதத்தை விழிப்புணர்வாக மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றது.

ராபர்ட்ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button