லஞ்சம் வாங்கும் விஏஓ… நடவடிக்கை எடுப்பாரா ஆட்சியர்..?
திருவாரூர் மாவடடம் மன்னார்குடி வட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் உள்ள களப்பாள் கிராம நிர்வாக அலுவலராக தியாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார். களப்பாள் கிராமத்தில் எந்த வேலையாக இருந்தாலும் பணம் இல்லாமல் எந்த வேலையையும் இவர் செய்வதில்லையாம். வீட்டுமனை பட்டா சம்பந்தமாக வருபவர்களிடம் கையெழுத்து ஒன்றுக்கு ஆயிரம் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை வாங்காமல் கையெழுத்து போட மாட்டாராம். இவர் ஏற்கனவே ஊர் தலையாரியாக இருந்து கிராம நிர்வாக அதிகாரியாக வந்ததால் அந்தப் பகுதியில் உள்ள அதிகாரிகள் அனைவரும் இவருக்கு அத்துபடி.
இவருக்கு தற்போது 55 வயதாகிறது. இன்னும் சில வருடங்களில் பணி ஓய்வு பெற இருக்கிறார். இவரது மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க இருக்கிறார். அதனால் பணியில் இருக்கும் சில காலங்களில் கிடைத்ததை சம்பாதித்துவிட்டு, பணியில் இருந்து சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்குவதை வழக்கமாக வைத்து செயல்பட்டதால் தற்போது லஞ்சம் வாங்கும்போது ஒருவர் வீடியோ எடுத்து விட்டதால் தற்போது சிக்கலில் இருக்கிறார்.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளது. இந்த வீடியோவும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு இந்த இதழுடன் புகாராக அனுப்பப்படும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? பொருத்திருந்து பார்ப்போம்.