திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்து திருவண்ணாமலையில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் 15-.10-.2018 அன்று நடந்தது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் தொடர்பானவைகளை வருகின்ற 31ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துக்கொண்டனர். ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, திருவண்ணாமலை உதவி கலெக்டர் தங்கவேல், நகராட்சி ஆணையர் பாரிஜாதம் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர். ஊர்வலம் தாலுகா அலுவலகத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகம் முன்பு நிறைவடைந்தது. இந்த ஊர்வலம் காலை 10 மணிக்கு தொடங்குவதாக இருந்ததால்,காலை 8மணிக்கே வர துவங்கி விட்டனர். ஊர்வலம் 11.30மணிக்கு தொடங்கியதால் மணிக்கணக்கில் பெண்கள் ரோட்டில் நின்றுக் கொண்டு இருப்பதை பார்த்து சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் மிகுந்த வேதனை அடைந்தனர்.