தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்
தமிழ்நாடு காவல் துறையில் காவலர்களுக்கான 11,741 காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் நல வாரியம் தேர்வுகளை நடத்தி காவலர்களை தேர்வு செய்வார்கள். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உடுமலைப் பேட்டையில் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு சீருடைப் பணியாளர்களுக்கான மாதிரித் தேர்வுகளை இலவசமாக நடத்துகின்றனர்.
இந்த இலவச மாதிரித் தேர்வு பயிற்சி முகாமில் எழுத்து தேர்வு, முடிந்ததும் உடற்கூறு அளத்தல், உடல் தகுதி திறன் மற்றும் மருத்துவ உடல் சோதனையும் நடத்த இருக்கிறார்கள். தேர்வுகள் முடிந்ததும் முதல் பத்து இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கி கௌரவிக்க இருக்கின்றனர்.
இந்த இலவச பயிற்சி முகாம் துவக்க விழாவில் உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா, வல்லூறு மாத இதழின் பொறுப்பாசிரியர் மோகன்ராம், சாமுராய் மாத இதழின் ஆசிரியர் பிரபு, வல்லூறு இதழின் உதவி ஆசிரியர் உதயகுமார், நாற்காலி செய்தி மாதம் இருமுறை இதழின் உடுமலை நிருபர் முத்துப்பாண்டி, ஜேசுதாஸ், வல்லூறு குமார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்பு மாணவர்கள் அனைவரும் உடுமலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் நலச்சங்கம் நடத்தும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கான இலவச மாதிரித் தேர்வுக்கான பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
–வல்லூறு குமார்