தமிழகம்

கொரோனா தொற்றால் உயிரிழந்த பத்திரிகையாளர் : அவரது குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவிகள் கிடைக்குமா?

தலைமைச் செயலகத்திற்கு வருகை தரும் பலருக்கும் நன்கு பரிச்சயமானவர். அனைவராலும் பாய் என்று அழைக்கப்பட்ட மொகைதீன் அகமது பத்திரிகையாளராக சிறப்பாக பணியாற்றினார்.

அமைச்சர்கள் முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரின் அறைகளுக்கும் பல பத்திரிகைகளை கொண்டு சேர்த்தவர். தினசரி, மாத இதழ், மாதம் இருமுறை இதழ் நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு (அக்ரடேசன், பிரஸ்பாஸ்) அரசின் அடையாள அட்டை பெறுவதற்கு, இவர் சரியான நேரத்தில் பத்திரிகைகளை கொண்டு சேர்த்ததும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.

அமைச்சர்கள், அதிகாரிகள் வெளியில் கிளம்பி காரில் ஏறினால் கூட பாயை பார்த்துவிட்டால் காரை நிறுத்தி இவர் கொடுக்கும் இதழ்களை புன்சிரிப்புடன் வாங்கிச் செல்வார்கள். அந்த அளவிற்கு அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை நன்கு அறிமுகமானவர். இவர் வினியோகம் செய்யும் இதழ்களுக்கு ஒரு சிறு தொகையையே சம்பளமாக பெற்றுக் கொள்வார். சிலரிடம் கொடுப்பதை பெற்றுக்கொள்வார். கட்டாயப்படுத்தி பணம் கேட்க மாட்டார்.

இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மாதேவி. இவர் ராயப்பேட்டையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து தலைமைச் செயலகத்தில் புத்தகம் விநியோகம் செய்யும் பணியை செய்து வந்தார். கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தன்னுடைய சொந்த ஊரான சேரன்மாதேவிக்குச் சென்று தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவருக்கு தீடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொகைதீன் அகமதுவிற்கு கொடிய நோய் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சிகிச்சை பலனிண்றி கடந்த மாதம் காலமானார் அவருக்கு இரண்டு மகன்களும், மனைவியும் உள்ளார். பல வருடங்களாக தலைமைச் செயலகத்தில் புத்தகம் விநியோகம் செய்து வந்த மொகைதீன் அகமது தீடீரென காலமானதால் அவர்கள் குடும்பத்தினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மங்கையர் சிகரம் மாத இதழின் நிருபருக்கான அரசின் அடையாள அட்டையை பெற்றவர். ஆகையால் அவரது குடும்பத்தினருக்கு அரசினர் உதவிகள் கிடைக்கவேண்டும் என்பதே பத்திரிகையாளர்களின் கோரிக்கையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ராபர்ட் ராஜ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button