வெளிநாடு வேலைக்கு அனுப்புவதாக பல லட்சம் ரூபாய் மோசடி
திருநெல்வேலியைச் சேர்ந்த ரமேஷ், மதுரை அப்துல், ஜோசப், அனில்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து வெள்ளகோவில் கோவை மெயின் ரோட்டில் டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தை துவக்கி நடத்தி வந்தனர்.
ஆன்லைனில் நியூசிலாந்து நாட்டிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு செய்வதாக அறிவித்து இருந்ததை பார்த்த திண்டுக்கல் மாவட்டம் கரிக்காளி பகுதியை சேர்ந்த மணிகண்டன், துரைசாமி, கேரளமாநிலம் பாலக்காடு, எர்ணாகுளம் பகுதிகளை சேர்ந்த ஆல்வின், எட்வர்டு உட்பட சுமார் 30க்கும் மேற்பட்டவர்களிடம் 50 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு கடந்த 19ம் தேதி மற்றும் 25ம் தேதி என ஏர் டிக்கெட்டுகளை வழங்கியுள்ளனர்.
ஆனால் மேற்கண்ட தேதிகளில் அந்த ஏர் டிக்கெட் புறப்படுவதற்கு முதல் நாள் கேன்சல் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வெள்ளகோவிலில் இருக்கும் அந்த நிறுவனம் கடந்த ஒருவாரமாக பூட்டி கிடப்பதால் போலி நிறுவனம் மூலம் வெளிநாடு செல்ல பணம் கொடுத்து ஏமாந்ததாக சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
- முத்துப்பாண்டி