தமிழகம்

தன்னலமற்ற மனிதநேய சேவையில் காவலர் சுபாஷ் சீனிவாசன்

இராமநாதபுர மாவட்டம் காவல் துறையில் பணியிட பயிற்சி மையத்தில் தலைமை காவலாராக பணியாற்றி வருபவர் எஸ்.சுபாஷ் சீனிவாசன். இவர் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளையும், அறிவிப்பு பலகைகளையும் அகற்றி, மரங்களின் பாதுகாவலராக வலம் வரும் காவலர் சுபாஷ் சீனிவாசனுக்கு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்து வருகிறது.

மனிதர்களைப் போல மரங்களுக்கு ஒரு உயிர் உண்டு. மரங்களின் மீது ஆணி அடிப்பதால் காலப் போக்கில் மரங்கள் பட்டுபோய்விடும். தனியார் வணிக நிறுவனங்கள் தங்களின் சுய லாபத்துக்காக விளம்பர பலகைகளை மரங்களின் மீது வைத்து ஆணிகளை அரைந்தும் கம்பிகளை வைத்தும் கட்டுகிறார்கள் இதனால் மரங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன. கடந்த சில வருடங்களாக மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்றி வருகிறார். இதற்காக தனது காரில் ஏணி, சுத்தியல், ஆணிகளை அகற்ற கருவிகள் என வைத்து தனது வாகனத்தை ஆணி பிடுங்கும் வாகனமாகவே மாற்றி அமைத்துள்ளார். இவர் இது வரை 200 கிலோ ஆணிகளை மரங்களில் இருந்து அகற்றியுள்ளார்.

தமிழக காவல் துறையில் மக்களின் காவலராக பணியாற்றிக் கொண்டே காலை மாலை நேரங்களில் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மரங்களில் இருக்கும் ஆணிகளை அகற்றி மரங்களின் பாதுகாவலாரகவும் பணியாற்றி வருகிறார். இவரது சேவையை பாராட்டி சுதந்திர தினத்தன்று இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராங் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றி விழிப்புணர்வு செய்ததோடு மட்டுமல்லால், தனது பணி நிமித்தமாகவோ சொந்த வேலை காரணமாகவோ தான் செல்லும் இடங்களில் எல்லாம் இந்த பணியை செய்து வருகிறார். சென்னை திருச்சி, போன்ற பெரு நகரங்களிலும் மரங்களின் மீது இருக்கும் ஆணிகளை அகற்றி அப்பகுதி மக்களால் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் குளம் கருவேல் மரங்களும், குப்பைகளும் சேர்ந்து குவிந்து இருப்பதே தெரியாமல் இருந்தது. தனி ஆளாக குப்பைகளை அகற்றி தீயிட்டு கொளுத்தி சுத்தப்படுத்தி இருக்கிறார். அதனால் அந்த குளத்தில் சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி இருக்கிறது. யாருடைய உதவியும் இல்லாமல் தனி ஒரு மனிதனாக புதர் மண்டிக் கிடந்த குளத்தை மீட்டதற்காக பொதுமக்கள் இவரை பாராட்டி வருகிறார்கள். அதே பகுதியில் காய்ந்து போன மரங்களை அகற்றி புதிய மரக் கன்றுகளை நட்டு பறவைகளுக்கு இருப்பிடத்தை அமைத்து தந்துள்ளார்.

இது மட்டுமல்லால் தெருவில் இறந்து கிடக்கும் நாய், பன்றிகளையும் மனிதர்களையும் தகனம் செய்வது போல் விலங்களையும் புதைத்து வருகிறார். கொரோனா நோய் பரவல் தீவிரமாக இருந்த நேரத்தில் தனது வீட்டில் கபசுர குடிநீர் தயார் செய்து தனது காரில் இராமநாதபுரம் நகரின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கினார். கொரோனா நிவராண நிதியாக முதலமைச்சர் நிவாராண நிதிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கினார். சாலை ஓரங்களில் தங்கியிருக்கும் ஆதரவற்ற முதியவர்களுக்கு மருத்துவ உதவி செய்து வருகிறார். கிணற்றில் தவறி விழுந்த தாயையும், குழந்தையையும் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றியதால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாராட்டுகளை பெற்றவர்.

கடமையில் கண்ணியமிக்கவரான சுபாஷ் சீனிவாசனின் மனித நேய மிக்க சாதனைகளை பாராட்டி சமூக சேவர்களும், தொண்டு நிறுவனங்களும் உலக சாதனை புத்தக நிறுவனமும் பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் வழங்கி வருகிறார்கள். தன்னலமற்ற காவலர் சுபாஷ் சீனிவாசனுக்கு நாற்காலி செய்தி நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிய வைப்பதோடு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button