கொரோனா நோயாளிகளுக்கு 36,000 கிலோ கொள்ளவு ஆக்ஸிஜன் கலன்…
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 6 மாதத்துககு மேலாக கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அர்ப்பணிப்புணர்வுடன் செயல்படுவதால், கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் மிக விரைவில் குணமாகி வருகின்றனர்.
தற்போது, 300- க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இங்கு சிகிச்சையில் உள்ளனர். இதனால்,சேலம் அரசு மருத்துவமனையில் அனைத்து வார்டுகளிலும் தட்டுப்பாடு இல்லாமல் ஆக்ஜிசன் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஏற்கெனவே இங்கு 6 ஆயிரம் கிலோ மற்றும் 12 ஆயிரம் கிலோ கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர்கள் இரண்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா தொற்று பாதித்த நோயாளிகள் சிகிச்சையில் இருப்பதால் அவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்பட்டால் உடனடியாக கிடைக்கும் வகையில் 36 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கலன் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனை டீன் அலுவலகம் அருகில் இந்த கலன் அமைக்கப்பட்டுள்ளது. கலனில் இருந்து குழாய்கள் வழியாக ஒவ்வொரு வார்டுக்கும் ஆக்சிஜன் கொண்டு செல்லப்பட்டு, ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் கொடுக்க முடியும். இன்னும், இரண்டொரு நாட்களில் இந்த ஆக்சிஜன் கலன் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.