மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்புத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் -: மாற்றுத்திறனாளிகள் சங்கம்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க வலியுறுத்தியுள்ளது.
வரும் 21ஆம் தேதி முதல் நடைபெற உள்ள 10, 11, 12ஆம் வகுப்பு தனி தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து அவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வரும் 21ம் தேதி முதல் 10 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனி தேர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தனி தேர்வு நடைபெறுகிறது. கொரோனா காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேர்வில் பங்கேற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளி மாணவர்களுக்கு அதுபோன்று தேர்ச்சி அளிக்கவில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுத்திருப்பது சரியல்ல என்றும், அவர்களுக்கு தேர்விலிருந்து விலக்கு அளித்து தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் தீபக் வலியுறுத்தியுள்ளார்.