தமிழகம்

அப்துல் கலாம் நினைவுநாள்

ராமேஸ்வரத்தில் ஓர் எளிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஏ.பி.ஜே.அப்துல்கலாம், விஞ்ஞானியாகி, பிரதமரின் அறிவியல் ஆலோசகராகி, குடியரசுத் தலைவராக உயர்ந்து 2015ம் ஆண்டு இதே நாளில் மறைந்தார். தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில், ஒரு படகோட்டியின் மகனாக 1931-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் நாள் பிறந்தார் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்.

இந்தியாவின் அக்னி ஏவுகணை, அணுகுண்டு சோதனை ஆகியவற்றில் இவரது பங்களிப்பு இவருக்கு புகழை தேடித் தந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் பதவிகள் வகித்தார் அப்துல் கலாம்.


பல குடியரசுத் தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும், அப்துல்கலாம், இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய உற்சாகம், தாக்கம் மற்றவர்களில் இருந்து பெரிதும் மாறுபட்டது.

அமமுகவினர்

ஒரு விஞ்ஞானியான அப்துல் கலாம் 2002ம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராக ஆனபோது, அது ஆச்சரியத்தையும் அளித்தது. ஆர்.வெங்கட்ராமனுக்குப் பிறகு ஒரு தமிழர் குடியரசுத் தலைவர் ஆகிறார் என்ற வகையில் தமிழகத்தில் ஓர் உற்சாகத்தையும் பரவவிட்டது. 2007 வரை அப்துல்கலாம் அந்தப் பதவியில் இருந்தார்.

பாதுகாப்பு ஆராய்ச்சித் துறையில் அவரது பங்களிப்புகளால் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்பே அவர் ஒரு நாயகனாக அறியப்பட்டார். ஆனால், இளைஞர்கள், மாணவர்களிடத்தில் அவர் நிகழ்த்திய உரையாடல், ஒரு குடியரசுத் தலைவர் நிகழ்த்தும் உரையாடலின் எல்லையைக் கடந்து மிக நெருக்கமாக உணரப்பட்டது அவரது புகழுக்கு இதுவும் ஒரு காரணம்.

அதிமுகவினர்

தங்களைப் போன்ற எளிய குடும்பத்தில் பிறந்து மிக உயர்ந்த இடத்துக்கு உயர்ந்தவர், எளிமையானவர் என்பது மக்கள் தங்களோடு அவைரை அடையாளப்படுத்திக்கொள்ளக் காரணமாக அமைந்தது.

புதிதாக எழுச்சி பெற்ற பாஜக தங்கள் தேசியவாத அரசியலின் ஒரு சின்னமாக அவரை முன்னிறுத்தியதும், அவரது பரவலான பிரபலத்துக்கு ஒரு காரணம். அக்கினிச் சிறகுகள் என்ற பெயரில் தமிழிலும், Wings of fire என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியான அவரது சுய சரிதை பரவலாக வாங்கப்பட்டு, படிக்கப்பட்டது. இளைஞர்கள் நம்பிக்கை தரும் நூலாக அதைப் பார்த்தனர். ஆனால், 2015ல் அப்துல் கலாம் இறந்தபோது அவர் புகழின் உச்சியை எட்டினார். ஆனால், நான்கே ஆண்டுகளில் அந்தப் பிரபலம் சற்று மங்கி, கடந்த ஆண்டு அவரது நினைவு நாளில் சற்று மந்தமாகவே அவர் நினைவுகூறப்பட்டார். பழைய உற்சாகம் இந்த ஆண்டு குறைந்து போயிருந்தது.

திமுகவினர்

தமிழ்நாடு அப்துல்கலாமை அதிகம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. வாழ்ந்த காலத்தில் கலாமை மதிக்காமல் இறந்த பிறகு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். அவரை தமிழகத்தின் நிரந்தர ஆலோசகராக வைத்திருந்து பல்வேறு ஆலோசனைகளை அவரிடம் இருந்து நம்முடைய அரசாங்கங்கள் பெற்றிருக்கலாம். அதனை கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்யத் தவறிவிட்டார்கள்.

கருணாநிதி நடத்திய விழாவுக்கு கலாம் வரவில்லை என்பதற்காக கலாமை கண்டு கொள்ளவே இல்லை. ஜெயலலிதா தான் ஆட்சிக்கு வந்த ஜோரில் கலாமின் ஆலோசகர் பொன்ராஜை கோட்டைக்கு அழைத்து சில ஆலோசனைகளைச் செய்தார். அதோடு சரி. இவ்வளவுதான் கலாமை தமிழகம் பயன்படுத்திக் கொண்ட அழகு. ஆனால் கலாமை உத்திரப் பிரதேசம் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டது. அந்த மாநிலத்துக்கு நிரந்தர ஆலோசகர் போலவே இருந்தார்.

அப்துல் கலாம் நினைவு நாளில் மத்திய, மாநில அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ள வில்லை.

இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு என்பதால் ராமேஸ்வரத்தில் பேக்கரும்பில் உள்ள கலாம் தேசிய நினைவகத்தில் அவரது 5-வது நினைவு நாளில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு துவா நிகழ்ச்சியில் கலாம் பேரன் சேக் சலீம், சகோதரர் சேக் தாவூத், கலாம் சகோதரர் மகள் டாக்டர் நசிமா மரைக்காயர் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் வீரராகவ ராவ் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதிமுக இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் எம் ஏ முனியசாமி, அமமுக மாவட்டச் செயலாளர் வ.து.ந.ஆனந்த், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் உள்ளிட்ட இரண்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும், திமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளரும் தீர்மானக்குழு துணைத்தலைவருமான சுபத.திவாகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

எம்.எம்.யு.அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button