விழுப்புரம்அருகே இரு தரப்புக்கு இடையிலானமுன்விரோதத்தில் 15 வயது சிறுமியை பெட்ரோல்ஊற்றி எரித்துக் கொன்றதாக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனை ஜெயபால் கண்டிக்க,மீண்டும் தகராறு எழுந்துள்ளது.
இதனால்ஆத்திரமைடந்த முருகனும் அவனது உறவினரான கலியபெருமாள்என்பவனும் சேர்ந்து 10ஆம் வகுப்பு படித்துவரும் ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீயை பெட்ரோல்ஊற்றி கொளுத்தியதாகக் கூறப்படுகிறது. 80 விழுக்காடு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகமுருகனையும் கலியபெருமாளையும் போலீசார் கைது செய்துள்ளனர். மரணப்படுக்கையில்சிறுமி கொடுத்த வாக்குமூலம் நெஞ்சைஉலுக்குவதாக இருந்தது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஜெயக்குமார், இரு தரப்புக்கும் நிலம்சம்மந்தமான தகராறு கடந்த 7 ஆண்டுகளாகஇருந்து வந்ததாகவும் கொலை சம்பவத்தில் வேறுயாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா எனவிசாரித்து வருவதாகவும் கூறினார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர்ஓ. பன்னீர் செல்வம் இணைந்துவெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில்நடந்துகொண்டதால் முருகனையும் கலியபெருமாளையும் கட்சிப் பொறுப்புகளில் இருந்துவிடுவிப்பதாகவும் அவர்களுடன் கட்சியினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துஅவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரின்மகள் சிறுமி ஜெயஸ்ரீ என்பவர்10.05.2020 அன்று முருகன் மற்றும் கலியபெருமாள்ஆகிய இருவரால் தீ வைத்ததில் பலத்தகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்துநான் மிகுந்த துயரமும் வேதனையும்அடைந்ததாக தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்துமுதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த துயர சம்பவத்தில்உயிரிழந்த சிறுமி ஜெயஸ்ரீயின் குடுபம்பத்திற்குஎனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும்தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் குற்றவாளிகள் மீதுதிருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள்கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைசட்டப்படி எடுக்கப்படும். உயிரிழந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்கநான் உத்தரவிட்டுள்ளேன்”