கோவை மேயர் கல்பனா அதிரடி மாற்றம் !.? பதவியை பிடிக்க காத்திருக்கும் மூன்று பெண் கவுன்சிலர்கள் !
கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேயராக கல்பனா கடந்த மூன்று ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளிலிருந்து இவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தலைமைக்கு சென்ற வண்ணம் இருந்தது.
மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மோதல், துணை மேயருடன் கருத்து வேறுபாடு, திமுக கவுன்சிலர்களுடன் மோதல், திமுக மூத்த நிர்வாகிகளுடன் மோதல் என இவருக்கு எதிராக அனைவரும் ஒன்றுதிரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தியும், தனது மேயர் பதவி பறிபோகாமல் தக்கவைத்து வந்தார். ஏற்கனவே நாமும் பலமுறை ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக இவரது செயல்பாடுகள் அனைத்தையும் கண்கானித்து வந்தது திமுக தலைமை. இவரது செயல்பாடுகள் மோசமாக இருப்பதாலும், திமுகவினர் மத்தியில் அதிர்ப்தி நிலவுவதாலும் இவரை மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவாலய வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். இன்று இரவுக்குள் மேயர் மாற்றம் என திமுக தலைமை அறிவிக்க உள்ளது என்கிறார்கள்.
இந்த தகவல்கள் ஏற்கனவே கோவையில் உள்ள சக கவுன்சிலர்களுக்கு தெரிய வந்ததால், மேயர் பதவியை பெறுவதற்காக சென்னையில் மாவட்ட செயலாளர் கார்த்தியின் மனைவி இளஞ்செல்வி, மீனா லோகு, தமிழ்மறையின் மனைவி தெய்வானை ஆகிய மூவரும் முகாமிட்டுள்ளனர். மீனா லோகுவிற்கு அதிக வாய்ப்பு உள்ளாக கூறப்படுகிறது. இதனால் கோவை திமுகவினர் உற்சாகத்தில் இருக்கிறார்களாம்.