தமிழகத்தில் தொழில் தொடங்க 8 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்பாடு
தமிழகத்தில் 8 நிறுவனங்கள் பத்தாயிரத்து 399 கோடி ரூபாய் முதலீட்டில், 13 ஆயிரத்து 507 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் புதிய தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமாகியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் விக்ரம்சோலார் என்ற நிறுவனம் ஐயாயிரத்து 423 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி ஏழாயிரத்து 542 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது.
சிங்கப்பெருமாள்கோவில் – ஒரகடம் நெடுஞ்சாலையில் யோடா என்ற நிறுவனம் நாலாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தரவு மையம் தொடங்கி இரண்டாயிரத்து 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளது. கோவையில் ELGI நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி, 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் CGD sathrai நிறுவனம் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கி 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.
ராணிப்பேட்டை NDR தொழில் பூங்காவில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. கோவையில் Aqua குரூப் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கி 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் JS Auto cast நிறுவனம் 400 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் GI Agro tech நிறுவனம் 36 கோடி ரூபாய் முதலீட்டில் முந்திரித் தொழிற்சாலை தொடங்கி 465 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளது.