தமிழகம்

மண் சரிந்து பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

ஆலங்குளம் அருகே கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் நெல்லை-தென்காசி மெயின் ரோட்டில் அ.தி.மு.க. பிரமுகர் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அங்கு ஏற்கனவே உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கு ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ‘வீஞ்ச்‘ (கற்களை அள்ளி மேலே அனுப்பும் எந்திரம்) பயன்படுத்தப்பட்டது.
இப்பணியில் தொழிலாளர்கள் 7 பேர் ஈடுபட்டிருந்தனர். 3 பேர் கிணற்றின் மேலேயும், 4 பேர் கிணற்றின் உள்ளே இறங்கியும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் காளத்திமடம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருக பிரபாகர், அருந்ததியர் தெருவை சேர்ந்த சுடலை, தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் வீரப்பன், பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்த சோனாச்சலம் ஆகிய 4 பேர் கிணற்றின் உள்ளே நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மாலை 4 மணியளவில் வேலை முடிந்து 4 பேரும், கற்கள் அள்ளும் எந்திரத்தில் ஏறி மேலே வருவதற்காக தயாராக நின்றனர். அப்போது திடீரென கிணற்றின் பக்கவாட்டில் இருந்து மண் சரிந்து அவர்கள் மீது விழுந்தது.
இதில் சுடலை, வீரப்பன், சோனாச்சலம் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். முருக பிரபாகர் படுகாயத்துடன் அலறி துடித்தார். இதை பார்த்து, கிணற்றின் மேலே நின்று கொண்டிருந்த மற்ற 3 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆலங்குளம் போலீசாரும், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் மகாலிங்க மூர்த்தி தலைமையில் ஆலங்குளம் தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கிணற்றின் உள்ளே இறங்கி, முதலில் முருக பிரபாகரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவருக்கு வலது கால் மற்றும் இடது கை முறிவு ஏற்பட்டு இருந்தது. அவரை உடனடியாக சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சுடலை, வீரப்பன், சோனாச்சலம் ஆகியோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பலியானவர்களின் குடும்பத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். அவர்கள் பலியானவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கிணறு ஆழப்படுத்தும் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. வீரப்பனுக்கு திருமணம் முடிந்து மனைவியும், 3 ஆண் குழந்தைகளும், சுடலைக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சோனாச்சலத்துக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் 2 மகள்களுக்கு திருமணம் முடிந்து உள்ளது.


இது தொடர்பாக ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே அத்தியூத்தில் சுப்பரமணியன் விட்டில் கிணறு தோண்டும் போது மண் சரிந்து. மதி, சோனாலம், சுடலை, ஆகிய முவரும் பலியாகினர்கள் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
பாதுகாப்பு அல்லாத கிணறை சுத்தம் செய்ய சொன்ன விட்டின் உரிமையாளர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் மெனவும் பலியானவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பிடு வழங்கிட வேண்டும் மெனவும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.
பலியான மதி, சோனாலம், சுடலை, ஆகியோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button