தமிழகம்

சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய தொழிலதிபர் ரன்வீர் ஷா யார்?

தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடு மற்றும் பண்ணை வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு நியமித்தது. அப்போது, ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலிடம் சிலைகள் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இதற்காக தமிழக அரசு திருச்சியில் அவருக்கு தலைமை அலுவலகம் அமைத்து தந்தது.
இதைத்தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலமையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தமிழகத்தில் காணமல் போன சிலகளை மீட்டு வந்தனர். இந்நிலையில் சிலை கடத்தலில் தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு இருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டு பிடித்துனர்.
சமீபத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், சைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர் ஷா வீட்டில் சோதனை மேற்கொண்டதில் 60 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவை அனைத்தும் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டவை. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சிலைகள் அனைத்தும் 100 வருடத்துக்கு மேல் பழமையானவை என்றும் இதன் மதிப்பு 125 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று ஐஜி, பொன் மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதில் ரன்வீர் ஷா என்பவரிடம் இருந்து இதுவரை 100க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா ஒரு சமூக ஆர்வலர். 1981 இல் முதலில் சென்னைக்கு வந்த ரன்வீர் இயக்குனராக அறிமுகமானார். பின் 1997 ஆம் ஆண்டு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த மின்சார கனவு என்னும் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தவர். அதன்பிறகு சில காரணங்களால் சினிமாவில் இருந்து வெளிவந்து, 1998 ஆம் ஆண்டில் சென்னையில் “பிரகிருதி அறக்கட்டளை”யினை ரன்வீர் உருவாக்கினார். இது கலாச்சார பாரம்பரியம் மற்றும் பரம்பரை பற்றிய அரங்கேற்றங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், ரன்வீர் ஷாவுக்கு சொந்தமாக ஒரு சக்கரை ஆலை உள்ளது. இந்தியா & இந்தியா என்ற பெயரில் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்றை பொங்களூரில் நடத்தி வருகிறார். மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் பி.எஸ் அப்பாரல்ஸ் என்னும் ஆடை ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார் ரன்வீர் ஷா. மும்பையில் பிறந்த இவர் சென்னையில் கடந்த 20 வருடமாக ஆடை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தான் அவர் சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடை ஏற்றுமதி தொழில் செய்வதன் மூலமாக சிலைகளை கடத்தி வெளிநாட்டிற்கு விற்று வந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இவரை காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் 6 லாரிகளில் ஏற்றி செல்லும் அளவிற்கு அவரின் வீட்டில் சிலைகளை கடத்தி குவித்து வைக்கப்பட்டு இருந்தது சோதனையில் தெரிய வந்தது. இதுவரை நடந்த சிலை கடத்தல் சோதனையில் ரன்வீர்ஷா வீட்டில்தான் நிறைய கோவில் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button