24 லட்சம் லஞ்சம்… : சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன முறைகேடு..!
இராமநாதபுரம்மாவட்டம் பரமக்குடியில் சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் அலுவலகம்செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சமீபத்தில்சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கு 40 நபர்களை புதிதாக நியமித்துள்ளார்கள்.இந்த பணியின் பணிக்காலம் மூன்றுமாதங்கள். இந்தப் பணியிடத்தில் பணிநியமனம் வழங்கியது சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா.
இதே அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரியும்ராம்குமார் என்பவர் பணி நியமனம்வழங்கப்பட்ட 40 நபர்களிடமும் தலா ஒருவருக்கு 60 ஆயிரம்வீதம் 24 லட்சத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டுசுகாதார ஆய்வாளர்களை நியமித்துள்ளார்கள். மேலும் 12 லேப் டெக்னீசியன் பணிகளுக்கும்லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பணியில் அமர்த்தியதாகவும்கூறப்படுகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தை தனிநபருக்கு பாதிவிலைக்கு மேல், அதிகாரிகளின் அனுமதிகடிதம் பெறாமல் விற்றதாகவும் நிர்வாகஅதிகாரி ராம்குமார் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திராவிடம் இது சம்பந்தமாக இரண்டு முறை நாம் விளக்கம் கேட்டு அவரை தொடர்பு கொண்ட போதும் தான் வேலையாக இருப்பதாக கூறி கைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் இந்திரா, நிர்வாக அதிகாரி ராம்குமார் ஆகிய இருவர் மீதும் கூறப்படும் லஞ்ச ஊழல் புகார் சம்பந்தமாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிகிறது.
இது சம்பந்தமாக சுகாதாரத்துறை செயலாளர், இயக்குனர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் விளக்கங்களைப் பெற்று விரிவான செய்தியை அடுத்த இதழில் பார்க்கலாம்.
– நமதுநிருபர்