அரசியல்தமிழகம்

விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்க வேண்டும்…: முதலமைச்சர்

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநில அளவிலான வங்கி குழு கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, ரிசவர் வங்கி மண்டல இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார். தமிழகத்தில் வங்கிகளில் கடன் வைப்பு தொகை 100 விழுக்காட்டை விட கூடுதலாக இருந்து வருவது, மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு நிறுவனங்கள் அதிகளவு முன்வருவது தெளிவாகிறது என்று தெரிவித்தார்.

மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளதால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முழு வீச்சில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், விவசாயிகளுக்கு வங்கிகள் தாராளமான கடன் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மதுரையில் மாடக்குளம் பகுதியில் கபசுர குடிநீர் மற்றும் சத்து மாத்திரைகளை அமைச்சர் செல்லூர் ராஜூ பொது மக்களுக்கு வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது, “முதலமைச்சர் உத்தரவுப்படி கூட்டுறவு வங்கிகளில் கடன் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது. ₹ 50,000 வரை யார் வேண்டுமாலும் கடன் வாங்கிக் கொள்ளலாம். ரேஷன் கார்டு மட்டும் காட்டி கடனை பெற்றுக்கொள்ளலாம்.

திமுக தலைவரின் ஒன்றிணைவோம் திட்டம் மூலம் மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது? திமுக அளித்த புகார் மனுக்களில் ரேஷன் கடை புகார் சம்ந்தமாகவோ, உணவு கிடைக்கவில்லை என்று எந்த மனுவும் இல்லை. பத்து, இருபது பேருக்கு உதவி செய்து விட்டு, லட்சக்கணக்கில் உதவியதாக திமுக கூறுவது போல, ஒரு சில மனுக்களை வைத்துக்கொண்டு லட்சணக்கில் புகார் மனுக்கள் பெற்றுள்ளோம் என ஸ்டாலின் கூறுகிறார்.

ஸ்டாலினின் குணம் கோணலாக உள்ளது. தமிழக மக்களிடையே முதலமைச்சர் பேருக்கு மேல் பேர் வாங்குகிறார் என்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் குறை கூறுகிறார். இக்கட்டான நேரத்தில் முதலமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல், குறை கூறும் ஸ்டாலினைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ளாவார்கள்.
மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுள்ளனர்” என்றார், இந்தியாவில் ஊரடங்கு தோல்வி என்று ராகுல்காந்தி கூறியது பற்றிய கேள்விக்கு, “அவர் தமிழகத்தின் ஊரடங்கு பற்றி கூறியிருக்க மாட்டார்” என்று அமைச்சர் பதிலளித்தார்.

விஜயகுமார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button