முதல்வன் பட பாணியில் உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர்
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் நிவாரண பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார். அப்போது அமைச்சரை சந்தித்த செல்வி என்ற பெண் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் தரமற்றதாகவும் அளவு குறைவாகவும் இருப்பதாக புகார் கூறினார்.
அதை கேட்ட அமைச்சர் செல்லூர் ராஜூ தனது ஆதரவாளரின் இருசக்கர வாகனத்தில் சென்று சம்பந்தப்பட்ட ரேசன் கடையில் ஆய்வு செய்தார்.
அந்த கடையில் தரமற்ற அரிசி விற்பனை செய்தது உறுதியானது. அதன் பிறகு 18 கிலோ அரிசி வழங்க வேண்டிய நபருக்கு 9 கிலோ அரிசி விற்பனையாளர் வழங்கியதும் உறுதியானது.
உடனடியாக முதல்வன் பட பாணியில் ரேசன் கடை விற்பனையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிகல்வை பொதுமக்கள் பாராட்டி மகிழ்ந்தனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் மற்ற அமைச்சர்களும் செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.