சினிமா

விபத்து எதிரொலி! : இந்தியன் 2 படப்பிடிப்பு தளம் இடமாற்றம்!

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாஸன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் இருக்கும் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் சண்டை காட்சியை படமாக்கியபோது கிரேன் அறுந்து விழுந்து ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட 3 பேர் மரணம் அடைந்தனர், 10 பேர் காயம் அடைந்தார்கள்.

விபத்துகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள். விபத்து நடந்த உடன்கமல் ஹாஸன் மற்றும் இந்தியன்2 படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இடையேஅறிக்கை போர் நடந்தது. இந்நிலையில்படப்பிடிப்பு தளத்தை மாற்றிவிட்டார்களாம்.

லாக்டவுன் முடிந்த உடன் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என்று லைகா நிறுவனம் அறிவித்தது. ஈவிபி ஃபிலிம் சிட்டிக்கு பதில் பின்னி மில்ஸில் படப்பிடிப்பை நடத்தப் போகிறார்களாம். கிரேன் விபத்து நடந்ததை பார்த்த சினிமா ரசிகர்கள் ஈவிபி ஃபிலிம் சிட்டி ராசி இல்லை. அங்கு பல விபத்துகள் நடந்து கொண்டே இருக்கிறது. உயிர் பலி நடப்பதை பார்த்தும் ஏன் படப்பிடிப்பை அங்கு நடத்துகிறார்கள் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேன் விபத்துக்கு பிறகு படப்பிடிப்பு நடக்காமல் இருந்தது. அதன் பின்னர் கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. இதற்கிடையே இந்தியன் 2 படத்தை கைவிடப் போகிறார்கள் என்று தகவல் வெளியானது. அதை பார்த்த லைகா படத்தை கைவிடவில்லை, திட்டமிட்டபடி எடுத்து ரிலீஸ் செய்வோம் என்று விளக்கம் அளித்தது.

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை மே மாதம் 11ம் தேதி முதல் நடத்தலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்த பிறகு இந்தியன் 2 படத்தின் எடிட்டிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. சென்னையில் இரண்டு இடங்களில் இந்தியன் 2 எடிட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கிறது. லாக்டவுன் முடிந்தவுடன் மீதமுள்ள காட்சிகளை படமாக்கவிருக்கிறார்கள்.

ஏற்கனவே எடுத்த காட்சிகளை போட்டுப் பார்த்தபோது 5 மணிநேரம் ஓடியிருக்கிறது. இதனால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட ஷங்கர் மற்றும் லைகா ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இதை பார்த்த லைகாவோ, இந்தியன் 2 படத்தை இரண்டு பாகங்ளாக வெளியிடும் திட்டமில்லை என்று தெரிவித்தது.

இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. ஆரம்பத்தில் தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர் மாறியதால் பிரச்சனையாக இருந்தது. பின்னர் அது தீர்ந்து படப்பிடிப்பை துவங்கி கமலுக்கு மேக்கப் போட்டால் அது சரிப்பட்டு வராமல் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேக்கப் பிரச்சனையை தீர்த்து மீண்டும் படப்பிடிப்பை துவங்கினால் கமல் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.

கமலுக்கு கால் சரியாகி மீண்டும் படப்பிடிப்பை நடத்தி வந்தபோது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. எப்படியோ இத்தனை பிரச்சனைகளை தாண்டி வந்த படக்குழு முழுப்படத்தையும் எடுத்து வெளியிட்டுவிட்டால் அதுவே பெரிய வெற்றி தான்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button