காவிரியில் அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்தல் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது
காவிரியின் குறுக்கே தடுப்பணை கூட புதிதாக கட்டக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில் அதை மீறும் விதமாக கர்நாடக அரசு அணை ஒன்றையும், நீர்மின் உற்பத்தி நிலையம் ஒன்றையும் கட்டுவதற்கு முடிவெடுத்துள்ளது. இதற்கு மத்திய நீர் ஆணையம் ஒப்புதல் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி காவிரி தொடர்பான எந்தவொரு நடவடிக்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்பது தெளிவுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்நாடக அரசும் மத்திய அரசின் இத்தகை செயல் தமிழகத்தை வஞ்சிக்கும் செயலாகும்.
கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சியைத் தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் கேட்டு கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்