தமிழகம்

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் குறித்து முகநூலில் அவதூறு : 6 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை சமூக வலைளதங்களில் இழிவுபடுத்தி அவதூறு பரப்பிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கால் மத வழிபாட்டுதலங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவும் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் எளிய முறையில் நடைபெற்றதோடு, இணையவழியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

இந்நிலையில் மீனாட்சி திருக்கல்யாணத்தை மிகவும் கொச்சையாக விமர்சித்தும், சமய நம்பிக்கை கொண்ட பக்தர்களை புண்படுத்தும் வகையிலும் பேஸ்புக்கில் பதிவிட்டதாக,  ஈரோட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் அவ்வாறு பதிவிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பேர் மீது மீனாட்சியம்மன் கோவில் வளாக  காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button