சுற்றித்திரிந்த இளைஞர்கள்… : சுளுக்கெடுத்த போலீஸ்..!
ஊரடங்கைமீறி சாலையில் வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர் ஒருவர், பெண்போலீசாரிடம் சவால் விடும் வகையில்,வீராவேசமாக முழங்கியதால், அவரை காவல் நிலையம்அழைத்துச்சென்ற காவல்துறையினர் முட்டிவைத்தியம் செய்து அனுப்பி வைத்தனர்.
கொரோனாநோய்க் கிருமியை கட்டுப்படுத்துவதை விட, அடங்க மறுத்துஅத்துமீறும், இவர்களைப் போன்ற இளைஞர்களை சமாளிப்பதுகாவல்துறையினருக்கு சற்று கடினமான பணிதான்..!என் ஊர் என்னோட கோட்டைஇப்படித்தான் சுற்றுவேன், உத்தரவு போட்ட முதலமைச்சரைவரசொல் என்று போலீசாரிடம் நெஞ்சுவிடைக்கமுழங்கும் இந்த இளைஞர் அடுத்துநடக்க இருக்கும் சம்பவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை..!
கட்சி மேடைகளில் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், கையை நீட்டி குரலை உயர்த்தி என்ன வேண்டுமானாலும் பேசலாம், சம்பந்தப்பட்ட கட்சியினரை தவிர யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள். ஆனால் நாடு முழுவதும் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், கை உயர்த்தி குரலை உயர்த்தி உடம்பை முறுக்கினால், இப்படி சில அடிகள் விழத்தான் செய்யும்..!
ஊருக்குள் கடைகள் எல்லாம் அடைத்திருக்க, செருப்பு வாங்க போவதாக விளக்கம் அளித்த டிப்ளமோ என்ஜீனியரான இவர், முககவசம் உள்ளிட்ட எந்த ஒரு முன் எச்சரிக்கையையும் பின்பற்றாமல் இரு சக்கர வாகனத்தில் ஊருக்குள் சுற்றியதோடு, அதை கண்டித்த பெண் போலீசாரிடம் வீதியில் நின்று, வீம்புக்கு உலக அரசியல் தொடங்கி, உள்ளூர் அரசியல் வரை முழங்கியதால், மண்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்..!
பொதுவாக அரசியல் மேடையில் பேசுவோர் தப்பிவிட வாய்ப்புண்டு, இணையத்தில் போலி கணக்கில் இது போல இஷ்டத்துக்கு பேசிவிட்டு தப்பிவிடலாம்..! ஆனால் இப்படி வீதியில் நின்று வீம்புக்கு பேசும் இவற்றை போன்றவர்கள் போலீசிடம் இருந்து தப்பிக்க வாய்பே இல்லை என்பதை உணரவேண்டும்..!
ஏனெனில் கொரோனாவுக்கு போராளி என்றெல்லாம் பிரித்துப்பார்க்க தெரியாது..! இளைஞர்கள் உலகம்… தனி உலகம் என்றாலும் வீட்டிலேயே இருங்கள், கொரோனா குறித்த விழிப்புணர்வுடன், கொஞ்சம் அடங்கியே இருங்கள்..!
பப்ஜி பாய்ஸ்களுக்கு பலே பனிஷ்மெண்ட்!
ஊரடங்கை மீறி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் அடுத்த எப்போதும் வென்றான் கிராமத்தில் கும்பலாக அமர்ந்து பப்ஜி விளையாடிய கிராமத்து பாய்சை பிடித்த போலீசார், அவர்களை பள்ளிக்கூட வளாகத்தை பெருக்கி சுத்தம் செய்யவைத்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதால் விழுப்புரம் மாவட்டத்தில் 289 வழக்குகள் பதிந்து 269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படாத மாவட்டம் என்று பெயரெடுத்துள்ள, தூத்துக்குடியில் தோப்பு கரணம், பெற்றோரால் புத்தி சொல்லுதல் உள்ளிட்ட வினோத தண்டனைகள் மூலம் எல்லை மீறும் இளசுகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கொரோனா குறித்த எந்த விழிப்புணர்வும் இன்றி, எப்போதும் வென்றான் கிராமத்தில் கும்பலாக அமர்ந்து கேரம் மற்றும் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை சுற்றி வளைத்த போலீசார் வீடியோ கேமில் வருவதை போல இரு லெவல் தண்டனைகளை வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
முதல் லெவலில் வரிசையாக நின்று 100 தோப்பு கரணம் போட வைத்தனர். இளைஞர்கள், 2 வது லெவலில் அங்குள்ள பள்ளிக்கூட வளாகத்தை விளக்குமாறு கொண்டு பெருக்கி கூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இளைஞர்களுக்கு போட்டியாக, தெருவில் கும்பலாக அமர்ந்து சீட்டுக் கட்டுகளுடன் சூதாடிய அரைக்கால் சட்டை அணிந்த சிறுவர்கள் அப்படியே சிக்கிக் கொண்டனர்.
சிக்கிய சிறுவர்களை கொத்தாக காவல் நிலையம் கூட்டிச்சென்ற காவல் துறையினர், அவர்களின் கைகளை டெட்டால் கொண்டு கழுவசெய்து, பெற்றோரை வரவழைத்து புத்தி சொல்லி அழைத்து செல்லும் தண்டனை வழங்கினர்.
கொரோனாபரவுதலை கட்டுப்படுத்தவும், ஊரடங்கை அமல்படுத்தவும் போலீசார்எடுத்து வரும் இது போன்றநடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. பெற்றோரின் விழிப்புணர்வே பிள்ளைகள் வீதிக்கு வருவதை தடுக்கும்..! என்றுஎச்சரிக்கின்றனர் போலீசார்.
ஊடரங்குஉத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடியஇளைஞர்கள்
ஈரோடு அருகே ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களை போலீசார் குட்டி கரணம் போட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு சமூக விலகலை பின்பற்ற அரசு அறிவுறுத்தி வரும் நிலையில், அதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் வெள்ளோடு என்ற இடத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற போலீசார், இளைஞர்களை பிடித்து குட்டிக்கரணம் போட வைத்தனர்.
ஊரடங்கைமீறிய மக்கள் மீது தண்ணீர்பீச்சி விரட்டியடித்த போலீசார்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தீவிரத்தை உணராமல் கூட்டம் கூடிய மக்கள் கிருமிநாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சியடித்து விரட்டப்பட்டனர்.
நாடு முழுதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மார்க்கெட் காய்கறிக்கடை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மக்கள் கூட்டம் கூடவேண்டாம் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் கூட்டம் சேர்ந்ததையடுத்து,நகராட்சி ஊழியர்களை அழைத்த காவல் துறையினர் கிருமிநாசினி கலந்த தண்ணீரை பீய்ச்சியடிக்கச் செய்தனர். இதனால் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டதால் மக்கள் கலைந்து சென்றனர்.
– சூரிகா