கொரோனா மருந்து வைரசை தன் உடலில் செலுத்திக் கொண்டாரா? : நிவாரன் 90 நிறுவன மேலாளர்..!
சென்னையில்நிவாரண் நைன்டி (Nivaran 90) மருந்து தயாரிக்கும்நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் அந்நிறுவனத்தின் பொது மேலாளர் உயிரிழந்தசம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுஜாதாபயோ டெக் என்ற நிறுவனத்தின்உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார். நிவாரண்90 மருந்து தயாரிக்கும் இந்நிறுவனத்தின் தொழிற்சாலை உத்தரகாண்ட் மாநிலம் காசிப்பூரில் செயல்படுகிறது.தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டுவருகிறது.
இந்த நிறுவனத்தின் பொதுமேலாளராக பணிபுரிந்து வந்தவர் 47 வயதான சிவநேசன். சென்னைபெருங்குடியை சேர்ந்த இவர், முதுகலைவேதியியல் படித்துள்ளார். சுஜாதா பயோடெக் நிறுவனத்தில்27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.நிவாரன்90, வெல்வெட் ஹெர்பல் ஷாம்பு, மெமரிவிட்டா உள்ளிட்ட பொருட்களை இந்நிறுவனம் மூலம் தயாரித்து பலநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தொழிற்சாலைஇயங்கும் காசிப்பூரில் தான் அந்நிறுவனத்தின் பொதுமேலாளரான சிவநேசன் இருப்பார். சென்னைக்கு வந்தவர் ஊரடங்கின் காரணமாகதிரும்பி செல்ல முடியவில்லை. இந்தநிலையில் வீட்டில் இருந்த சிவநேசனை அந்நிறுவனத்தின்உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் அழைத்து,கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கலாம்என யோசனை கூறியுள்ளார்.அதற்கானதயாரிப்பு பணிகளில் கடந்த ஒரு மாதமாகதியாகராயநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் வைத்து ஈடுபட்டுள்ளனர்.
சளி,தொண்டை கரகரப்பிற்கு, இருமலுக்கான மருந்துகளை இவர்களுடைய நிறுவனத்தில் தயாரிக்கின்றனர்.இதற்கானமூலக்கூறுகள் எல்லாம் வேதியியல் நிபுணரானசிவநேசன் கண்காணிப்பில் நடக்கும். அதன் அடிப்படையில் ஏற்கனவே,உள்ள மூலக்கூறுகளை வைத்து மேலும் சிலமருந்து பொருட்களை அதனுடன் சேர்த்து கொரோனாதடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.அதற்காகசோடியம் நைட்ரேட் வாங்கி வந்து அதன்மூலம் புதிய வேதியியல் கரைசலைஉருவாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் எந்தபுதிய மருந்தை தயாரித்தாலும் சிவநேசன்தான் அதை உட்கொண்டு சுயபரிசோதனையில்ஈடுபடுவார் என அந்நிறுவன ஊழியர்கள்கூறுகின்றனர்.அதே போன்று இந்த மருந்தையும்உட்கொண்டு, டாக்டர் ராஜ்குமாருக்கும் கொடுத்துள்ளார்.அதிகளவிலான கரைசலை சிவநேசன் உட்கொண்டதால்சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.டாக்டர் ராஜ்குமார் சிகிச்சைக்குப் பின் நலமடைந்துள்ளார்.டோசேஜ்அதிகமுள்ள மருத்துவ மூலப் பொருட்களை பயன்படுத்தியதால்சுவாசம் நிறுத்தப்பட்டு இதய துடிப்பு நின்றிருக்கலாம்என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. என்றாலும் உடற் கூராய்வு அறிக்கைவந்த பிறகே முழு விவரமும்தெரியவரும் என வழக்கை விசாரித்துவரும் தேனாம்பேட்டை காவல் துறையினர் கூறுகின்றனர்.
கொரோனாவேகமாக பரவி வரும் நிலையில்அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கஉலகின் பல நாடுகளும் களமிறங்கியுள்ளது.சரியான வழிமுறை இல்லாத முயற்சியின்விபரீதம் தான் இந்த உயிரிழப்புஎன மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது தொடர்பாக அந்தநிறுவனத்திடம் தொடர்பு கொண்டு விளக்கம்பெற முயன்றும் உரிய பதில் கிடைக்கவில்லை.
கொரோனாவுக்குதடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்உயிரிழந்ததால், அவருக்கும் கொரோனா தொற்று இருக்குமோஎன்ற சந்தேகத்தின் பேரில் அவரது உடலுக்குபரிசோதனை செய்யப்பட்டது. அதில் உயிரிழந்த சிவனேசனுக்குகொரோனா தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவரும் தேனாம்பேட்டை போலீசார், சிவனேசன் வேண்டுமென்றே கொரோனா வைரசை உடலில்செலுத்திக் கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணையைதீவிரப்படுத்தியுள்ளனர்.
சிவனேசனுடன்இணைந்து மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில்ஈடுபட்ட நிவாரன் 90 நிறுவன உரிமையாளர் டாக்டர்ராஜ்குமாரையும் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.மேலும்அனுமதியின்றி மருந்து தயாரித்த விவகாரம்தொடர்பாக அவரிடம் விசாரணையும் துவங்கப்பட்டுள்ளது.விசாரணையில் வைரசை உடலில் செலுத்திக்கொண்டது உறுதி செய்யப்பட்டால் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல் துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ரா.கார்த்தி