அரசியல்

சிக்கலில் அதிமுக.. செக் வைக்கும் கவர்னர்..!

துணை முதல் அமைச்சரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான பன்னீர் செல்வத்தின் வாரிசுகளான ரவீந்திரநாத், ஜெயபிரதீப், கவிதா பானு ஆகிய மூவரும் நடத்திவரும் விஜயந்த் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், சமீபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருமுருகன் பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட ராக்கிபாளையம் கிராமத்தில் 9.02 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அங்கீகாரம் பெறுவதற்காக இந்த நிறுவனத்தின் இயக்குநரான ஜெயபிரதீப் திருமுருகன் பூண்டி பேரூராட்சியில் 11.12.2019 இல் மனைப்பிரிவு அங்கீகார கட்டணம் செலுத்தி மனு அளிக்கிறார். இவரது மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் 12.12.2019 இல் 24 மணி நேரத்தில் அனுமதியும் வழங்கியிருக்கிறார்கள்.

வீட்டுவசதித் துறையின்அமைச்சர் பன்னீர் செல்வம் என்பதால் தனது வாரிசுகளின் நிறுவனத்திற்கு மனு கொடுத்த மறுதினமேஅனுமதி வழங்கி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருமுருகன் பூண்டிபேரூராட்சி தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. ஆனால் தொல்பொருள்ஆய்வுத்துறையின் அனுமதி பெறாமல் வீட்டுமனைகளாகவும், தனி வீடுகள் கட்டிக்கொள்ளவும் அதிகாரிகள்சட்டத்திற்கு புறம்பாக அனுமதி வழங்கி இருக்கிறார்கள். ஒரு சாமானியர் வீட்டுமனை அனுமதிக்குமனு செய்தால் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு மேல் அலைந்து அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்து அனுமதி வாங்குவதற்கு அவர்கள் படும் வேதனை எண்ணிலடங்காதது.

ஒரு துறையின் அமைச்சராக இருந்து கொண்டு தனது குடும்ப வாரிசுகள் அந்த துறைசார்ந்த தொழில்களில் ஈடுபட்டு, தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்தி அனுமதி வழங்கியிருப்பது முறையற்ற செயலாக இருக்கிறது. தனது குடும்ப வாரிசுகள் நிர்வகிக்கும் தனியார் நிறுவனத்திற்கு பன்னீர் செல்வம் தனது பதவியை தவறுதலாக பயன்படுத்தி ஒரே நாளில் அனுமதி வழங்க அதிகாரிகளை பயன்படுத்தியது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இதற்கிடையே தமிழக ஆளுநர் கொரோனா தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக விளக்கம் கேட்பதற்காக முதல்வர் எடப்பாடியை அழைத்தார். உடனே தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் பியூலா ராஜேஷ், சகிதமாக முதல்வர் எடப்பாடி தமிழக ஆளுநரை சந்தித்தார். ஆளுநர் எடப்பாடியிடம் சுகாதாரத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, உயர்கல்வித்துறை, தகவல்தொழில் நுட்பத்துறை போன்ற துறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. மத்திய அரசுக்கும் எனது கருத்தை தெரிவித்து இருக்கிறேன்.

கொரோனா தொடர்பானமருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கொள்முதல், ரேபிட் டெஸ்ட்கிட் கொள்முதலில் நடந்த ஊழல்தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு முதல்வருக்குத் தெரிந்துதான் எல்லாமே நடந்தது என்று விஜயபாஸ்கர்பதில் சொல்லியிருக்கிறார். விஜயபாஸ்கர் இப்படி சொல்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையாம். இந்த சந்திப்பில் எடப்பாடி மற்றும் அதிகாரிகளின் பதில்கள் எதுவும் திருப்தியாகஇல்லாததால் அதிமுக அரசுக்கு எதிராக காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்டார்.

ஏற்கனவே பாமக சார்பில் கொடுக்கப்பட்ட புகார்கள், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறை, உயர்கல்வித்துறை, தகவல்தொழில்நுட்பத்துறை போன்ற துறைகள் சார்ந்த ஊழல் கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டாராம். ஏற்கனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும் இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்று எதிர்கட்சிகள் கூறிவரும் நிலையில் கொரோனா முடிவதற்குள் அதிமுக அரசுக்கும் முடிவு கட்ட ஆளுநர் செயல்பட ஆரம்பித்துவிட்டாராம். ஆக மொத்தம் அதிமுக அமைச்சர்கள் பலருக்கு கொரோனா முடிவதற்குள் நமது கதையும் முடிந்துவிடும் என்ற கொரோனா பயத்திலேயே இருக்கிறார்களாம்.

-சூரிகா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button