அரசியல்
தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தில் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றச்சாட்டு
வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அரசியல் நாடகம் ஆடுவதாக மத்திய அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
ஊரடங்கால் சிக்கித் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வெள்ளி அன்று மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் தொழிலாளர்களிடம் ரயில் கட்டணத்தை அரசு வசூலிப்பதாக சோனியா காந்தி குற்றம் சாட்டியதுடன், அதற்கான பணத்தை தமது கட்சி திரட்டி வழங்கும் எனவும் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகம், தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் 85 சதவிகித மானியத்துடன் வழங்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள 15 சதவிகிதத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் வழங்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.