பரமக்குடியில் ஏழை எளியோர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது..!
பரமக்குடியில் கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளியோர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது.
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காய்கறிகள் , மளிகை பொருள்கள் , மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் தினந்தோறும் கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்திய தினக்கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுக தொண்டர்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி 9 வார்டில் உள்ள ஏழை எளியவர்களுக்கு பரமக்குடி திமுக தொழிற்சங்க பேரவை சார்பில் அதன் தலைவர் முத்து, தலைமையில் செயலாளர் அல்போன்ஷா முன்னிலையில் பரமக்குடி திமுக நகர செயலாளர் சேதுகருணாநிதி அரிசி பருப்பு காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினார். ஏற்கனவே பரமக்குடி நகர் முழுவதும் முடிவெட்டும் தொழிலாளர்கள் , அமைப்பு சாரா தொழிலாளர் என ஏராளமானோர் உதவி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.