திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார்.
மாற்றுத் திறனாளிகள் , தூய்மை பணியாளர்கள், ஆதரவற்ற விதவைகள் மற்றும் செவிலியர்களுக்கு நிவாரணப் பொருள்களை திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. நோய் தொற்று பரவல் கட்டுப்பாட்டிற்குள் வராததால் மேலும் ஏற்கனவே அமலில் இருக்கும் 144 தடை உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் காய்கறிகள், மளிகை பொருட்கள், மருந்தகங்கள், உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் தினந்தோறும் கூலி வேலை பார்த்து குடும்பம் நடத்திய தினக்கூலி தொழிலாளர்கள், மாற்றுதிறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், மற்றும் ஏழை எளியோரின் வாழ்வாதரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது .
இதனால் ஏழை எளிய மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் உள்ள நயினார்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி பையுடன் முககவசங்கள் மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை இராமநாதபுரம் திமுக மு.மாவட்ட செயலாளர் சு.ப.த.திவாகரன் வழங்கினார்.
நிவாரண பொருட்களை வாங்க வந்த பயனாளிகள் அனைவரும் முககவசம் அணிந்து வந்து சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி சென்றனர்.
இந் நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைச்சாமி , ஒ.துணை செயலாளர்கள் லட்சுமணன் , தங்கராஜ் , ஒ.மாணவரணி து.செயலாளர் முருகேசன், ஒ.இளைஞரணி செயலாளர் ராஜேஷ் , அவைத்தலைவர் ஜீவானந்தம், மணக்குடி ஊராட்சித்தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- ராஜா