அரசியல்

பரமக்குடியில் அமமுக சார்பில் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் : மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழங்கினார்…

பரமக்குடியில் அமமுக சார்பில் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி காய்கறிகள் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் வழங்கினார் .

ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு மாவட்டம் முழுவதும் கட்சி பாகுபாடு இல்லாமல் அத்தியாவசிய பொருட்களை மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் மாவட்ட , ஒன்றிய , நகர்கழக நிர்வாகிகள் ஒத்துழைப்போடு வழங்கி வருகிறார்.

பரமக்குடியில் இன்று வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளியோர் 530 பேருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகள் போன்றவற்றை மாவட்ட கழக செயலாளர் வ.து.ந. ஆனந்த், கழக மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் முத்தையா, நகர கழக செயலாளர் கலைவாணன் ஆகியோர் வழங்கினர்.
நலத்திட்ட உதவிகளை பெற வந்த பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து வந்து பொருட்களை பெற்று சென்றனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button