தமிழகம்

உலகத்தை உலுக்கிய நோய்கள், பதட்டங்கள்

ஆறாம் நூற்றாண்டு காலத்தில் ஐரோப்பா கண்டத்தில் பரவிய பிளேக் நோயினால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது மனிதகுலமே நொறுங்கி விட்டது. காண்ஸ்டாண்ட் நோபிளிலிருந்து ஆட்சி செய்த ரோம் அரசன் பைசாண்டியன் பேரரசை சேர்ந்த ஜஸ்டினியன் ஆட்சிக் காலத்தில் இந்த கொடிய நோய் பரவியது. கிட்டத்தட்ட 50 மில்லியன் மக்கள் இதற்கு பலியானார்கள். இதை ‘ஜஸ்டினியன் பிளேக்’என்று கூட அழைப்பதுண்டு.

பின்னாளில் 14ஆம் நூற்றாண்டில் ‘பிளேக் டெத்’என்ற பரவல் நோயால் ஐம்பது மில்லியனுக்கு அதிகமான மக்கள் இறந்தனர். மூன்றாவதாக ‘தி கிரேட் லண்டன் பிளேக்’1664ல் பரவி லண்டன் முழுவதும் மிகவும் பாதிப்புக்குள்ளானது.

மலேரியா, காலரா, பிளேக் போன்ற நோய்களால் இந்தியாவில் பம்பாயில் மட்டும் ஒன்றரை லட்சம் மக்களுக்கு மேல் மாண்டனர். இவை நடந்தது 1896 காலக்கட்டங்களில். இறுதியாக 1994ல் சூரத்தில் ‘எலி நோய்’என்று 56 பேர் இறந்தனர். இப்படி இந்தியாவில் வங்கத்திலும், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இந்த நோய் தாக்குதல் இருந்தது. இப்படி ஒரு நோய் ஒரு பக்கம் தாக்குதல் நடத்தியது. வறட்சியின் காரணமாக ‘தாது வருச பஞ்சம்’ மக்களை வாட்டி பலர் பட்டினியில் இறந்ததெல்லாம் உண்டு.

இரண்டாம்உலகப் போரின் போது நோய்தாக்குதல் இல்லையென்றாலும் போருக்குப் பயந்து மக்கள் வீட்டில்முடங்கியிருந்தனர். அன்றாட உணவுக்குக் கூடதத்தளித்ததுண்டு. இப்படியான துயரமான வரலாற்றுச் செய்திகள்இன்றைக்காவது தகவல் தொழில் நுட்பத்தால்கொரோனா வைரஸ் குறித்தான  செய்திகளும்  நம்மைப்பாதுகாத்துக்கொள்ளஆலோசனைகளும்பெறவும் விழிப்புணர்வும் ஏற்படுகிறது. அன்றைய காலத்தில் இந்தவசதியெல்லாம் கிடையாது.  வானொலியும்செய்தித்தாள்களும் இருந்தாலும் அது அனைத்து தரப்பினருக்கும்எட்டுவதில்லை.

கடந்த1979ம் ஆண்டு ஜூலை மாதம்11ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்கைலேப் (SkyLab) காலம் முடிந்துபூமியில் தெறித்து விழப் போகிறது என்றும்அதுவும் குறிப்பாக தென் இந்தியாவில் விழுந்துவிடும் என்றும் செய்திகள் வரமக்கள் அச்சத்தில்  தவித்தனர்.தமிழகமெங்கும் ஒரே பேச்சு. அன்றுஇரவு 2 மணிக்கு கோளில் மோதிகீழே விழும் என்றவுடன் தெருவில்அன்றைக்கு இரவெல்லாம் நடமாட்டம் இல்லை. அப்போது தொலைக்காட்சிசென்னை நகரில் மட்டும் தான்இருந்தது,  மற்றஊர்களில் செய்தித்தாள்களும் வானொலி மட்டும்தான் இருந்தன.  இதில்வேடிக்கை என்னவென்றால் அன்றைக்கு இரவு மதுரையில் இருந்தேன்சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள்  உறுப்பினர்வழக்கறிஞர் நன்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் எ.ராஜகோபாலும் நானும் மதுரை ரீகல்தியேட்டரில் படம் பார்க்கச் சென்றபொழுது,டவுன் ஹால் ரோட்டின்எதிரில் இரவு உணவுக் கடைகளில்காசில்லாமல் உணவை கொடுத்தது கண்ணில்பட்டது. “ஸ்கைலேப் விழுந்தா நம்ம என்ன காசஎடுத்துட்டா போகப் போறோம். சாப்புடுப்பா”என்று அந்த சிறிய உணவுவிடுதிக்காரர் சொன்னார். அதுபோல ரீகல் தியேட்டரிலும்“படம் பாருப்பா நான் டிக்கெட்  வாங்கித்தரேன். இன்னைக்கு இருப்போம் நாளைக்கு இருப்போமா தெரியாது” என்பது போன்ற குரல்கள்கேட்டன.

கிட்டத்தட்ட 41 ஆண்டுகள் முடியப் போகின்றன.  இந்த ஸ்கை லேப் 280 மைல் வேகத்தில் தாக்கலாம் அதுவும் எங்கே  தரையில் விழப் போகிறது  என்பதை உடனே  சொல்ல முடியாது  என்று விஞ்ஞானிகள் தெரிவித்தது ஒரு மாத காலம் பீதியும் பேச்சும் இருந்தது. தமிழகத்தில் அப்போது  எம்ஜிஆர் ஆட்சி. காவல்துறையும், மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருந்தன. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கிருஷ்ணசாமி  ஸ்கைலேப் பிரச்சினையை கண்காணிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்டார். பின்னாட்களில் ஏற்பட்ட சுனாமி என சில உண்டு.

இப்படியெல்லாம் கடந்து வந்துள்ளோம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு பதட்டமும்  பீதியையும்  ஏற்படுத்டும் சிக்கல்கள் வந்துக் கொண்டுதானிருக்கின்றன.அதையும் கடக்கிறோம்.

தன்னம்பிக்கையும் பொறுப்புணர்வும் தான் இந்த  இயற்கை  பேரிடர்களை சமாளிக்க முடியும். கொரோனா வைரசால் தன்னம்பிக்கையோடு தனித்திருப்போம், தள்ளியிருப்போம்.  இது நமக்கான சோதனை மட்டுமல்ல மனித இனத்திற்கே சவால் என்ற புரிதல் இருந்தால் போதும். பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் மடிந்தோம் என்று எதிர்வினையில்லாமல் ஏதோ நம்மால்  முடிந்தது  கட்டுப்பாடோடு செல்வோம் என்று முறைப்படுத்தினால், போட்டிகள் பொறாமைகள் இல்லாமல் இருந்தால் நல்லது என்பதற்காக இயற்கை  தருகின்ற  பால பாடம் என்பதை உணர வேண்டும். இயற்கையை யாரும்   மிஞ்ச முடியாது.  தனிமனித உரிமைகள்  அவசியம்.  அந்த எல்லையைத் தாண்டி  சென்றால் விளைவுகள் விபரீதமாகும் என்ற புரிதல் எல்லாருக்கும் வேண்டும். இயற்கையை காப்போம், நம்மையும் காப்போம்.

புரிதலுக்கு “மாற்றார் உங்களால் இனி எதுவும் முடியாது என எளிதாக நினைக்கும்போது எழுந்து நின்று வென்றுகாட்டுவதே வலிமை… இலக்கிலிருந்து கண்களை அகற்றினால், தடைகள் மட்டுமே தென்படும்.  அடையும்வரை மாறாத நோக்கும் போக்கும்“

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button