தமிழகம்

வேப்பிலை மஞ்சளுடன் கிருமிகளை விரட்ட கிராமத்தினர் ஆர்வம்..! : கிருமி நாசினி வழங்கப்படுமா.?

விழுப்புரம் அருகே உள்ள காங்கேயனூர் கிராம மக்கள் கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக வேப்பிலையை அரைத்து, மஞ்சள் கலந்த தண்ணீருடன் வீதி வீதியாக தெளித்து வருகின்றனர். சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துகள் கிராமங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

கொரோனா கிருமிகளை அழிக்கும் வகையில் சென்னை மாநராட்சியின் 9 மண்டலங்களில் வீதி தோறும் ரசாயண கிருமி நாசினிகளை தெளிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள டிராக்டருடன் கூடிய நவீன எந்திரங்கள்..!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் தண்ணீர் லாரிகளில் கிருமி நாசினி மருந்துகளை கொண்டு சென்று தெரு தெருவாக தெளித்து வருகின்றனர்.

நகரங்களுக்கும் பேரூராட்சி பகுதிகளுக்கும் கிடைத்திருக்கும் சுகாதாரதுறையின் கிருமி நாசினி மருந்துகள் கிராமங்களை இன்னும் சென்றடையவில்லை. இதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கொரோனா நோய் தொற்றை தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

தூத்துக்குடிமாவட்டம் மேல மங்கல குறிச்சிகிராமத்தில் கொசுவுக்கு மருந்து அடிக்கும் எந்திரத்தைகொண்டு உள்ளூர் இளைஞர்களே வீதிவீதியாக மருந்து தெளித்து வருகின்றனர்.

திருச்செந்தூரை அடுத்த கீழ நாலு மூலைக்கிணறு கிராம மக்கள் பிளாஸ்டிக் டிரம்களில் மஞ்சள் தண்ணீரை நிரப்பி, வேப்பம் இலையை போட்டு வீதி வீதியாக தெளிக்க தொடங்கி இருக்கின்றனர். சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வேப்பிலையும் மஞ்சள் நீரும் தான் கிருமி நாசினியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இவர்களுக்கெல்லாம் மேலாக விழுப்புரம் மாவட்டம் காங்கேயனூர் கிராமத்தில் கொரோனா கிருமியை பாரம்பரிய முறைப்படி விரட்டுவதற்காக கிராமத்து இளைஞர்களுக்கு உதவியாக அம்மியில் வேப்பிலை அறைத்து கொடுக்கின்றனர் பெண்கள்..!

பெண்கள் அறைத்துக் கொடுத்த வேப்பிலையை பேரல்களில் உள்ள மஞ்சள் கலந்த தண்ணீருடன் கரைத்து டிராக்டரில் ஏற்றிச்சென்று இளைஞர்கள் தெரு தெருவாக தெளித்தனர்.

வேப்பில்லை, மஞ்சளால் கொடிய கிருமியான கொரோனாவை விரட்ட இயலுமா? இயலாதா? என்பது இங்கே முக்கியம் அல்ல, கொரோனா குறித்த விழிப்புணர்வு கிராமங்கள் வரை சென்று சேர்ந்திருக்கின்றது. இதனை உணர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கிராமப்புறங்களுக்கும் கிருமி நாசினி மருந்துகளை விரைந்து அனுப்பி வைக்க சுகாதாரதுறையும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களும், தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும் விதமாக கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்வதோடு, கும்பலாக சுற்றாமல் வீட்டுக்குள் தனித்திருப்பதே அனைவருக்கும் நலம் உண்டாகும்..! என்பதை உணர வேண்டும்.

கிருமிகளைவிரட்டும் 
கற்றாழைச்சாறு ஹேண்ட்வாஷ்

கொரோனாகிருமியை அண்டவிடாமல் விரட்ட, கை சுத்தம்செய்வதற்கான, வைட்டமின் – இ திரவத்துடன், கற்றாழைச்சாறுகலந்த ஹேண்ட் வாஷ் தயாரிப்பில்தேனியைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிகுழு பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள, நாள் ஒன்றுக்கு 20 முறை கைகளை சுத்தம் செய்யவும், தேவையானவர்கள் முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், தேனி மாவட்ட நிர்வாகம், ஹேண்ட் வாஷ் தயாரிப்புப் பணியைக் கொடுவிலார்பட்டியைச்சேர்ந்த புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு அளித்துள்ளது.

சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் தமிழக அளவில் பல சாதனைகளை புரிந்த இந்த சுய உதவிக்குழு, தற்போது அரை லிட்டர் பாட்டில்கள் கொண்ட ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

வைட்டமின் – இ திரவத்துடன், கற்றாழைச்சாறு கலந்த மூலப்பொருள்களை பெரிய கேனில் ஊற்றி, 30 மணி நேரம் கழித்து தேவைக்கேற்ப தண்ணீர் கலந்து பாட்டில்களில் அடைத்து வழங்கப்படுகிறது. சிறந்த கிருமி நாசினியாக செயல்படுவதுடன் இதுதோலுக்கு எந்தவித எரிச்சலையும் ஏற்படுத்துவதில்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தெரிவித்தனர்.

இதுவரை 500 லிட்டர் வீதம் மூன்று ஆர்டர்கள் வந்ததில், இரு ஆர்டர்களை முடித்து, தற்போது மூன்றாவது ஆர்டருக்காக ஹேண்ட்வாஷ் தயாரித்து வருவதாகவும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் தாங்களே ஹேண்ட் வாஷ் தயாரித்து வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

– தி.கார்த்தி

எங்க ஊருக்கு வராதீங்க … : பேனர்வைத்து கிராம மக்கள் வேண்டுகோள்..!

திருப்பூர் அருகே காடையூரான் வலசு கிராமத்தின் எல்லையில், ஊர்மக்களை தவிர்த்து மற்ற நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், கொரோனா தொற்று பரவலை தடுக்க கிராமத்தில் குடியிருக்கும் நபர்களை தவிர வெளி நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் என கிராம மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button