கொரோனா பீதியிலும் இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா !
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து தனிப்படையை அமைத்து சோதனைப் பணிகளை தீவிரப்படுத்தினார்.
இதையடுத்து தனிப் படையினரின் தீவிர சோதனையில் தனுஷ்கோடி அருகே எம் ஆர் சத்திரம் பகுதியில் நான்கு மூட்டைகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மூட்டைகளில் தலா இரண்டு கிலோ வீதம் 48 பிளாஸ்டிக் கவர்களில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ்ஐ கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா முட்டைகளை கைப்பற்றிய தனிப்படை காவலர்களை நேரில் சென்று பாராட்டினார் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் . மேலும் இது தொடர்பான விசாரனையையும் தீவிரப்படுத்தியுள்ளார் .
அ.நூருல் அமீன்