அமானுஷ்ய சக்திகள் இருக்கிறதா ? இல்லையா ? “சிவி-2” திரை விமர்சனம்
சில வருடங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சிவி. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் நிறுவனம் தயாரித்துள்ளது. “சிவி-2” திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தில் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுக்கிறார்கள். காவல்துறையினர் விசாரணைக்குப் பிறகு சில வீடியோ ஆதாரங்கள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்து வருகின்றனர். அந்த ஆதாரங்களை ஆய்வு செய்கையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் நடைபெறுகிறது.
பல ஆண்டுகளாக அரசால் தடை செய்யப்பட்ட மருத்துவமனை கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் இருக்கிறாதா என ஆய்வு செய்து படம் பிடிக்கச் சென்ற மாணவ, மாணவிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா ? அந்த மருத்துவமனை கட்டிடத்தில் மாணவ, மாணவிகளுக்கு என்ன நேர்ந்தது ? என்பது மீதிக்கதை.
படத்தில் த்ரில்லர் கதைக்கான சுவாரஸ்யங்களை கூடுதலாக சேர்த்திருக்கலாம். திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு ஏற்பட்டுள்ளது நன்றாகவே தெரிகிறது. பொம்மைகளை வைத்து எவ்வளவோ பேய் கதைகள் தமிழ் ரசிகர்களை மிரட்டியிருக்கின்றன. இயக்குனர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம் .
இந்தப் படத்தில் நடிகர் சரண் ராஜின் மகன் தேஜா சரண் ராஜ், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்