தமிழகம்

துப்புரவு பணியை கையில் எடுத்த பட்டதாரி… : கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்

கோவை மாநகராட்சியில் 549 நிரந்தர துப்புரவு பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணிக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும் என்பது தான் தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பி.இ., எம்.எஸ்.சி., எம்.பி.ஏ., பட்டதாரிகள் உட்பட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சையத் முக்தார் அகமது அப்பணியை துறந்து விட்டு, துப்புரவு பணியை கையில் எடுத்துள்ளார். 35 வயதான சையத், கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர்.

ஹைதராபாத்தில் ஒரு தனியார் டேட்டா என்ட்ரி நிறுவனத்தில் உதவி மேலாளராக பத்து ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார். ஏசி ரூம்மில் பணியாற்றி வந்த சையத், அரசு வேலை மீது இருந்த பற்று காரணமாக தற்போது மாநகராட்சி மத்திய மண்டலத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.

தனியார் நிறுவனத்தில் ரூ.35,000 மாதச்சம்பளமாக பெற்று வந்ததாகவும், தற்போது ரூ.16,000 சம்பளத்தில் துப்புரவு பணியாளராக சேர்ந்துள்ளதாகவும் சையத் தெரிவித்துள்ளார். அரசு வேலையில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு உள்ளிட்டவை இருப்பதாலும், வொர்க் பிரஷர் இல்லாமல் வேலை செய்யலாம் என்பதாலும் இப்பணியில் சேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் எந்த பணியும் இழிவானது இல்லை எனவும், மன நிறைவுடன் பணியாற்றி வருவதாகவும் சையத் தெரிவித்துள்ளார்.

நோய் வந்தால் மருத்துவர்கள் குணப்படுத்தும் பணிகளை செய்வது போல, நோய் வராமல் தடுக்கும் பணியை துப்புரவு பணியாளர்கள் செய்வதாக பெருமிதத்துடன் சையத் தெரிவித்துள்ளது நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button