அரசியலில் தனக்குப் பிடித்த தலைவர் அண்ணாதான் என்று குறிப்பிட்டதோடு, அண்ணாவைப் போற்றும்வகையில் அவர் பிறந்த மண்ணாண காஞ்சிபுரத்திலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி.
உலகத் தமிழர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த ரஜினி பிரஸ்மீட் சம்பவம் நடந்து முடிந்துவிட்டது. உண்மையில் இதைச் செய்தியாளர் சந்திப்பு என்றுகூட சொல்ல முடியாது. தான் என்ன பேச வேண்டும் என முடிவெடுத்திருந்தாரோ அதைமட்டும் பேசிவிட்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் ரஜினி. ஆனால், செய்தியாளர் சந்திப்பு முடிந்து வீட்டுக்குப் போனதுமே மூத்த பத்திரிகையாளர்கள் தொடங்கி அரசியல்வாதிகள், நடிகர்கள், நண்பர்கள் எனப் பலரிடமும் தன் பேச்சுக்கான அவர்களின் ரியாக்ஷன் என்ன எனக் கேட்டுவருகிறார் ரஜினி.
லீலா பேலஸில் செய்தியாளர்சந்திப்பு முடிந்ததும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்த ரஜினிக்கு வாசலில் ஆரத்தி எடுத்துஉள்ளே அழைத்துப்போனார் அவரின் மனைவி லதா. காலையில் இருந்து போயஸ் கார்டனில் காத்திருந்தமாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் சிறிதுநேரம் பேசினார் ரஜினி. “என்னுடைய பேச்சை சிலர்திசைதிருப்பலாம். ஆனால், நீங்கள் அப்படியே அதை தமிழகம் முழுக்க மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். குறிப்பாக, பெண்களிடம் தன் பேச்சின் வீடியோவைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. உங்கள் குடும்பம், உங்கள்வீடு இருக்கும் ஏரியா, நீங்கள் உறுப்பினராக இருக்கும் மக்கள் நல அமைப்புகள் என அனைத்திலும்நான் சொன்ன திட்டங்கள் பற்றி எடுத்துச் சொல்லி மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்றதோடு,அவர்களுக்கு சில ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.
ட்விட்டர், ஃபேஸ்புக் எனச் சமூக வலைதளங்களில் தன் பேச்சைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதைப் பர்சனலாக அவரே தன்னுடைய ஸ்மார்ட்போனில் சிறுது நேரம் படித்திருக்கிறார். வாட்ஸ்-அப்பில் அவர் பேச்சுக்காக வந்த மீம்ஸ்களை அவரின் நண்பர்கள் அனுப்ப அதைப் பார்த்து ரசித்திருக்கிறார். குறிப்பாக, பெண்களில் சிலர் அவர் பேச்சைப் பாராட்டி எழுதியிருப்பதைப் படித்ததும் உற்சாகமாகியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.
பா.ஜ.க, காங்கிரஸ் மட்டுமல்லாமல் தி.மு.க, அ.தி.மு.க-வில் உள்ள ரஜினியின் நலம் விரும்பிகளும் அவருக்கு போன்செய்து அவரது பேச்சை எப்படிப் பார்த்தார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் ‘நீங்கள் கட்சி அறிவிப்பை வெளியிட்டதும் உங்களோடு வந்துவிடுவோம்‘ என்று உறுதியும் அளித்திருக்கிறார்கள்.
மாலையில் வீட்டில் சில முக்கியமான நண்பர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் ரஜினி. அப்போது உங்கள் ரசிகர்கள் முழுவதுமாக உங்கள் பேச்சை ரசிக்கவில்லை என்று சிலர் ரஜினியிடம் சொல்லியிருக்கிறார்கள். ‘’என் ஃபேன்ஸைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும். 40 வருஷமா என்கூடவே இருக்காங்க. சீக்கிரமா அவங்களுக்கு ஒரு சந்தோஷமான சர்ப்ரைஸ் தரப்போறேன்’’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி.
அரசியலில் தனக்குப் பிடித்தத் தலைவர் அண்ணாதான் என்று குறிப்பிட்டதோடு, அண்ணாவைப் போற்றும்வகையில் அவர் பிறந்த மண்ணாண காஞ்சிபுரத்திலிருந்து அரசியல் பயணத்தை ஆரம்பிக்க இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. காஞ்சிபுரத்தில்தான் ரஜினியின் பொதுக்கூட்டம் இருக்கும் என்கிறார்கள். அதேபோல் ரஜினியின் கட்சிக்கொடியில் அண்ணாவின் படம் இடம்பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
அடுத்தகட்டமாக, கரோனா பீதியெல்லாம் அடங்கியதும், ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் செய்தியாளர் சந்திப்பை நடத்த இருக்கிறார் ரஜினி. தமிழ் வருடப்பிறப்பு நாளன்று அல்லது அந்த வாரத்தில் `ஆண்டவன்’ சொல்லிவிட்டால் கட்சியின் பெயரை அறிவித்துவிடுவார் ரஜினி.
– சூரிகா
ரஜினி பேசியதிலிருந்து…
அரசியலில் நான் மூன்று திட்டங்களை வைத்திருக்கிறேன். முதலாவது திட்டம் : அரசியல் பதவி என்பது தொழில் போலாகிவிட்டது. தேர்தலுக்குப் பின்னர், தேவையில்லாத பதவிகள் நீக்கப்படும். பலர், நான் ஆளும்கட்சி ஆள் என செயல்படுகிறார்கள். வேறு தொழிலே இல்லாமல் இதனையே தொழிலாக வைத்துள்ளனர்.
இரண்டாவது திட்டம் : சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் வயதான பலர் இருக்கிறார்கள். ஆனால், நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். ரஜினி அதற்குப் பாலமாக இருக்க வேண்டும்!
இளைஞர்கள் அரசியல் சாக்கடை என்று விலகிவிடக்கூடாது. அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.
நல்லவர்கள், கண்ணியமானவர்கள், வேறு கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள் உள்ளிட்டவர்களுக்கு 30-&40 சதவிகிதம் இடம் வழங்கப்படும்.
மூன்றாவது திட்டம்: கட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சியில் இருப்பவர் தவறு செய்தால், அவர் பதவியிலிருந்து தூக்கி வீசப்படுவார். இரண்டும் ஒரே நபரிடம் இருப்பதால், ஆட்சியில் என்ன தவறு நடந்தாலும் அதைக் கேட்க முடியாத சூழல் இருக்கிறது. கட்சியின் பணிகள் தனியாக நடப்பதால், ஆட்சியில் இருப்பவர்கள் கட்சிகுறித்த கவலை இல்லாமல் ஆட்சியில் கவனம் செலுத்த முடியும்.
முதல்வர் கனவு எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. இது, 1996 -ம் ஆண்டிலே மக்களுக்குத் தெரியும். தேடிவந்த முதல்வர் பதவியை வேண்டாம் என்றவன் நான்…
Rajini speech brother wishes best wishes Frank Shankar tamil nadu makkal votes pavam your think good thanks again Frank Shankar tamil actress and DMK leader Stalin brother.