தமிழகம்

பெண் குரலில் பேசி 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் நூதன முறையில் மோசடி !

சென்னையில் பெண் குரலில் பேசி 1000-க்கும் மேற்பட்ட ஆண்களை நூதன முறையில் மோசடி செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் பிரிவில் 170-க்கும் மேற்பட்டவர்கள் பெயரில், பெண்ணை ஏமாற்றியதாக கூறி ஒரே மாதிரியான புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. பெரும்பாலும் அனைத்து புகார்களும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக புகார்தாரரை விசாரிக்கும் போது தான் இந்த புகாரை கொடுக்கவில்லை எனவும் தனக்கும் இந்த புகாருக்கும் சம்பந்தமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் உதவி ஆய்வாளர் உறவினர் ஒருவருக்கும் இதேபோன்று போலீசார் புகார் கொடுத்ததாக விசாரணைக்கு அழைத்துள்ளனர். அவர்சென்னை மதுரவாயலில் சேர்ந்த பொன்ராஜ் என்பது தெரியவந்துள்ளது.

அதில் பொன்ராஜ் வேலைக்காக லோக்நெக்டோ என்ற செயலி மூலம் விண்ணப்பித்துள்ளார். அப்போது ஆபாசமாக உரையாடலாம் எனக் கூறி விளம்பரம் ஒன்று செயலியில் வந்துள்ளது. அதில் சென்று பொன்ராஜ் பார்த்தவுடன் பணப்பரிவர்த்தனை செயலி மூலம் 100 ரூபாய் செலுத்துமாறு பிரியா என்ற பெண் விளம்பரம் செய்துள்ளர்.

100 ரூபாய் அனுப்பியவுடன் பிரியா என்ற பெண்ணின் நிர்வாண படம் பொன்ராஜ் செல்போனுக்கு வந்துள்ளது.தொடர்ந்து வீடியோ காலில் பார்க்க வேண்டும் என்றால் 1500 ரூபாய் செலுத்துமாறு பிரியாவின் விளம்பரத்தில் கேட்டுள்ளார்.

அதற்கு பொன்ராஜ் 1500 ரூபாய் பணப்பரிவர்த்தனை செயலியில் செலுத்தில் அழைக்கும் போது வர மறுத்துள்ளார். அதன்பின் பொன்ராஜ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி ஒன்று அவருக்கு வந்துள்ளது. திடிரென பொன்ராஜ் நம்பரை பயன்படுத்தி காவல்துறையில் ஆன்லைன் புகார் சென்றதால், போலிசார் பொன்ராஜை விசாரணைக்கு அழைக்கும் போது தான் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.இதனையடுத்து பொன்ராஜ்க்கு வந்த செல்போன் அழைப்பை வைத்து போலீசார் ஆய்வு செய்ததில் திருநெல்வேலி பணங்குடி இருப்பிடத்தை செல் சிக்னல்கள் வைத்து கண்டுபிடுத்துள்ளனர்.

பின்னர் பிரியா என்ற பெண்னை பிடிக்க திருநெல்வேலிக்கு போலிசார் செல்லும் போது அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெண்குரலில் பேசி மோசடி செய்தது வலன் ராஜ்குமார் ரீகன் என்ற வாலிபர் என தெரியவந்துள்ளது. ரீகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 1000-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் இதுபோன்று நூதன முறையில் மோசடி செய்து பணம் பறித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெண் குரலில் பேசி ஆபாச உரையாடலுக்கு அழைத்து மோசடி செய்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.சேத்துப்பட்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது, சபிதா மற்றும் ரூபா என்ற பெண்கள் மூலம் இது போன்று லோகாண்டா செயலியில் பெண்கள் பெயரில் கணக்கு துவங்கி, பெண் போல் பேசி சம்பாதிப்பதை ரீகன் கற்றுக் கொண்டுள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் பல பெண்களின் நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, மோசடி வலையில் சிக்கும் ஆண்களிம் ஆபாச உரையாடல்கள், போட்டோக்கள், வீடியோக்கள் பயன்படுத்தி போலிசில் மாட்டிவிடுவேன் என கூறியும், ஆன்லைன் புகார் கடிதத்தை அனுப்பியும் மிரட்டி பணம் பறித்து உள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறிப்பாக லோகாண்டா செயலியில் போன் மூலம் ஆபாசமாக ஒரு மணி நேரம், பேசுவதற்கு ஆயிரம் ரூபாய், ஆபாசமாக வீடியோ காலில் 30 நிமிடம் பேசுவதற்கு 1,500 ரூபாயும், குறுஞ்செய்தி மூலம் ஆபாசமாக ஒரு மணி நேரம் பேசுவதற்கு 500 ரூபாய், என அட்டவணை போட்டு, பிரியா மற்றும் ரூபா என்ற பெயரிலும் லொக்னடோ செயலி மூலம் பலரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இந்த செயலி மூலம் ஆடியோ வீடியோ மற்றும் குறுஞ்செய்தி மூலமாக ஆபாசமாக ஆண், பெண் பேசிக் கொள்ளலாம். ஆனால் இதை பயன்படுத்தி ரீகன் மிரட்டி பணம் சம்பாதிப்பதால் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ஆடியோ கால், குறுஞ்செய்தியில் ஆபாசமாக பேசும் வரை பிரச்சனை இல்லை, வீடியோ காலில் பேச அழைக்கும் போது முகம் தெரியும் என்பதால் ரீகன் மறுத்து வந்துள்ளார். ஆனால் வலையில் சிக்கிய ஆண்கள் ரீகனை பெண் என நினைத்து ஆபாசமாக பேச தொடர்ந்து செல்லில் அழைக்கின்றனர். பணம் போட்டு கெஞ்சுகின்றனர்.
பணம் வருவது நின்றவுடன் ஆன்லைனில் ரீகன், பெண் பெயரில் புகார் அளித்து வலையில் சிக்கும் ஆண்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். அதுவும் வலையில் சிக்கிய ஆண்கள் நம்பரிலேயே ஆன்லைன் புகாரை ரீகன் அளிப்பதாகவும், இதனால் போலிசார் கால் செய்து விசாரணை செய்யும் வேலையில் இதனை ரீகன் சாதகமாக பயன்படுத்தி கொண்டு சம்பந்தப்பட்ட ஆண்களிடம் பெண் குரலில் மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்கத்தில் மட்டும் அல்லாமல் நாடுமுழுவதும் பல ஆண்களை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மேலும் துபாய், மலேசியா, அமேரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள ஆண்கள் ஏமாறியதும் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலிசார் விசாரணை செய்து கொண்டிருக்கும் போதே ரீகன் கைது செய்யப்பட்டது தெரியாமல் துபாய் சேர்ந்த வாலிபர் தினமும் 5000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தி வருவதாகவும், ரீகன் செல்போனுக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருப்பதாகவும் போலிசார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று டெக்னாலஜியை பயன்படுத்தி பல ஆண்களை மிரட்டி சொத்துக்களையும் குவித்துள்ளார். இவ்வாறு மோசடி செய்து சொந்தமாக வீடு கார் மற்றும் பல்வேறு சொத்துக்களை வாங்கி உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ரீகன் போலி நம்பர்கள் பாதிக்கப்பட்ட ஆண்கள் நம்பரை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக கொடுக்கப்பட்ட புகார்களில் அனைத்தும் கீழ்ப்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் காவல் நிலைய வட்டாரங்களிலிருந்து இருக்கிறது.

குறிப்பாக ரீகன் மோசடி வலையில் சிக்கும் ஆண்களின் நம்பர்களை வைத்து, வேறு பெயரில் ஆன்லைனில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அந்த எண்ணிற்கு விசாரிக்க அழைக்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் தனக்கும் இந்த புகாருக்கும் சம்பந்தமில்லை எனத் தெரிவித்த உடன் போலீசார் வழக்கை முடித்து விடுகின்றனர்.

ரீகன் மீது மோசடி செய்து பணத்தை பறித்தல், தொழில்நுட்பம் மூலம் மோசடி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்று ரீகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ரீகனை போன்று பலர் இந்த செயலி மூலம் ஏமாற்றி வருவதை கண்டுபிடிக்க அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

& முத்துப்பாண்டி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button