தமிழகம்
கள்ள மவுனம்
தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு தமிழ் மொழியிலும், சமஸ்கிருதத்திலும் நடைபெற்றது. நீதிமன்ற முடிவின்படி இது நடைபெற்றது. தமிழ் மொழியில் குடமுழுக்கு நடைபெற வேண்டும் என்று ஸ்டாலின், அழகிரி, ராமதாஸ், சீமான், தோழர் நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன், பெ.மணியரசன், பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் ஒருமித்து குரல் கொடுத்தனர். கோயில் வழிபாடு தொடர்பாக எல்லாவற்றுக்கும் முந்திக்கொண்டு அறிக்கை விடும் பாஜகவினர் யாருமே குடமுழுக்கு தொடர்பாக கருத்து எதுவும் சொல்லாமல் கள்ளமவுனம் சாதிப்பது ஏன் என்று புரியாமல் பல ஆன்மிகவாதிகள் குழம்பித் தவிக்கின்றனர்.