தமிழகம்

மின்வாரிய அலுவலகத்தில் முதல்வர் படத்துக்கு தடை : மேற்பார்வை பொறியாளரின் அடாவடி.-.! : நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்

தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வரும் முதலமைச்சரின் படத்தை அரசு அலுவலகங்களில் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுவந்துள்ளனர். அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதி நிதிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்தல் பணியாற்றுவதும் வாக்களிப்பதும் தனது உரிமையாக கொண்டு செயல்படுவார்கள் தேர்தல் முடிந்தபிறகு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்கும் முதல்வருக்கு கட்சிப்பாகுபாடின்றி அரசு அலுவலகங்களில் முதல்வரின் படத்தை வைத்து மரியாதை செலுத்துவதை மரபாக கொண்டு இன்றும் செயல்படுத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் அரசு அலுவலகங்களில் முதல்வர் படம் வைக்கும் மரபிற்கு மாறாக தற்போது மேற்பார்வை பொறியாளராக பணியாற்றிவரும் பக்தவச்சலம் தனது அலுவலகத்தில் முதல்வரின் படத்தினை எடுத்துள்ளதோடு தனது கட்டுப்பாட்டில் இருந்துவரும் ஒரு சில மின்வாரிய அலுவலகங்களிலும் முதல்வரின் படத்தினை வைக்க தடை போட்டுள்ளதாக மின் வாரிய தொழிற்சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் பக்தவச்சலம் பவானி ஈரோடு ஆகிய ஊர்களில் பணியாற்றிய போது அரசு விதிகளுக்கு அப்பாற்பட்டு முரண்பட்டு செயல்படுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் மரபுகளை மதிக்க மாட்டார் இவருக்கு முன் திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றியவர்கள் அலுவலகத்தில் முதல்வரின் படத்தை வைத்துள்ளனர் .அதை பக்தவச்சலம் எடுக்க உத்தரவிட்டிருப்பது மின்வாரிய சக அதிகாரிகளும் தொழிற்சங்க நிர்வாகிகளும புகார் தெரிவிக்கின்றனர். அதே போல திண்டுக்கல் மின் மேற்பார்வை பொறியாளர் பக்தவச்சலத்தை சந்திக்க வரும் அதிகாரிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் யாரையும் உட்கார அனுமதிக்காமல் அவமரியாதையாக நிற்க வைத்து அதிகார துஷ்விரயோகமாக செயல்பட்டு வருகிறாராம்.

சுகாதார மற்ற முறையில் இயங்கிவரும் மின்வாரிய கேண்டின் இதுதான்

500 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கும் இந்த அலுவலகத்தில் எந்த அடிப்படை வசதியும் செய்ய நடிவடிக்கை எடுக்க மறுத்து வருவதாக மின்வாரிய அதிகாரிகளும்,ஊழியர்களும் குறை கூறுகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் முறைகேடாக பக்தவச்சலம் லஞ்சம் வாங்கி கொண்டு சுகாதாரமற்ற கேண்டின் நடத்த அனுமதி கொடுத்துள்ளாராம். இது சம்மந்தமாக புகார் கொடுத்தாலும் அதை வாங்க மறுப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த கேண்டின் அலுவலத்தின் முன்புறம் சாலையோர கடையாக வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் கழிப்பறை பழுதடைந்த நிலையில் இருந்து வருகிறது. இது சம்மந்தமாக மின்வாரிய ஆண், பெண் ஊழியர்கள் புகார் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மேற்பார்வை பொறியாளர் பக்தவச்சலம் தான் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறோம் என்பதை மனதில் கொள்ளாமல் அதிகார துஷ்பிரயோகமாக தனியார் நிறுவன அதிபர் போல செயலாற்றி வருவதும் சக அதிகாரிகளிடையே மரியாதை குறைவாக நடந்து கொள்வதும் மின் வாரிய அலுவலகத்தில் தினந்தோறும் முனுமுணுப்பாகவே இருந்து வருகிறது. மேலும் பக்தவச்சலத்திடம் தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தால் அதறக்கு எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் நான் எந்த அமைச்சருக்கும் பயப்படமாட்டேன். முதல்வர் படத்தை வைப்பது பற்றி எனக்கு தெரியும் உங்க வேலையை பாருங்க என அதிகார தோனியில் பேசி தொழிற்சங்க நிர்வாகிகள் முகம் சுளிக்கும் வகையில் பேசிவருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் பணியின் போதும் பணிபுரியும் அரசு அலுவலங்களில் பொது நிலையோடு செயல்படுவதுதான் மரபு . ஆனால் திண்டுக்கல் மேற்பார்வை பொறியாளர் பக்தவச்சலம் தான்தோன்றி தனமாக செயல்படுவதோடு அரசு அலுவலகத்தில் முதல்வரின் படத்தை வைக்காமல் தொடர்ந்து மறுத்து வருவதற்கும் சம்மந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சக அதிகாரிகளும் தொழிற்சங்க நிர்வாகிகளும் புகார் தெரிவிக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். போராட்டம் நடப்பதற்குள் முதல்வரின் படத்தை வைத்தால் சரி…

ரகுநாத்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button