ஆத்தூர் ஊராட்சியில் ஊழல் ஊராட்சி செயலாளர் மணவாளன்…
நாடு வளர்ச்சியடைய கிராமங்கள் வளர்ச்சியடைய வேண்டும். விவசாயம் செழித்தால் தான் நாடு செழிப்படையும் தமிழகத்தை பொறுத்தவரை கிராம வளர்ச்சியில் மாநில அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கிராமங்களில் வளர்ச்சி திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகின்றனர்.
கிராமபுறங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கிராமங்களின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் எந்த வகையில் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வந்தாலும் இதற்கு எதிர்மாறாக திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பணம் பறிக்கும் ஊராட்சி செயலர் மனவாளன் இருக்கும் வரை ஆத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்கள் வளர்ச்சி அடைவது கேள்வி குறிதான்? ஆத்தூர் ஊராட்சி 12 வார்டுகளை கொண்டதாகும் சுமார் 9 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஆத்தூர் ஊராட்சி முழுவதும் விவசாயம் செழிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. ஆத்தூர் ஊராட்சி ஊழலில் முதன்மை பெரும் ஊராட்சியாக செயல்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறையில் கிராம ஊராட்சிகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் ஆத்தூர் ஊராட்சியில் தற்போது ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வரும் மணவாளன் திண்டுக்கல் மாவட்டத்திற்கே அவப்பெயர் ஏற்படும் வகையில் பணிக்கு துரோகம் செய்து வரும் ஊழல் பேர்வழியாக செயல்பட்டு வருகிறார்.
தற்போது ஆத்தூர் ஊராட்சி செயலாளராக உள்ள மணவாளன் தனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து வருவதால் மேல் அதிகாரிகள் மணவாளன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் கருத்து கூறுகின்றனர் வட்டாரவளர்ச்சி அலுவலரின் ஆலோசனையின் படி ஆத்தூர் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பிரச்சனை ஏற்படுத்தி மக்களை போராட தூண்டிவிட்டு அதன்மூலம் அதை சரிசெய்வதாக புதிய போர் போட்டு முறைகேடு செய்து அரசு பணத்தை கையாடல் செய்துள்ளார். இது சம்பந்தமாக மக்களை சாலை மறியல் செய்ய தூண்டிவிட்ட தகவல் மாவட்ட ஆட்சியர் வரை செல்லவே உயர் அதிகாரிகள் மணவாளனை தற்காலிக பணி நீக்கம் செய்ய சொல்லியும் உயர் அதிகாரிகளின் உத்திரவை பீ.டி.ஓ மதிக்காமல் மனவாளனை அய்யங்கோட்டை ஊராட்சிக்கு இடமாறுதல் செய்து கண்துடைப்பு நடவடிக்கை மூலம் காப்பாற்றிவிட்டனர்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ளதாக பல புகார்கள் வந்தும் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆத்தூரில் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் 4 பேருக்கு கொடுக்க வேண்டிய நிதியினை மனவாளன் தனது வங்கி கணக்கிலும் மாற்றி மோசடி செய்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர், பசுமை வீடு கட்ட ரூ.30 ஆயிரம், தொகுப்பு வீடு கட்ட பயனாளிகள் தேர்வுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் தான் மனவாளன் அனுமதி வாங்கி கொடுப்பாராம் மனவாளன் அய்யங்கோட்டை ஊராட்சிக்கு இடமாறுதல் செய்தும் முறைகேடாக ஆத்தூர் ஊராட்சியில் பணியாற்றி வருவதும் உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா என்பது புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
கடந்த 2016-&2017ம் ஆண்டு முருகன் என்ற பெயருக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அந்தப் பகுதி முழுவதும் பேசப்பட்டது. 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் பணியாளர்களை தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறை கட்ட குழிதோண்டும் பணிக்கு பயன்படுத்தி அதில் ஒரு பெரும் தொகையை மனவாளன் சுருட்டி விட்டாராம்.
இது போன்ற முறைகேடுகள் செய்து மக்களிடம் பணம் பறிக்கும் ஊழல் வாதியாக செயல்பட்டு வரும் ஆத்தூர் ஊராட்சி செயலர் மனவாளன் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தூர் ஊராட்சிப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றுள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் திறம்பட செயல்பட்டு மக்கள் சேவை ஆற்றவுள்ளனர். ஊராட்சி செயலர் மனவாளன் போன்றோர் மீது சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே புதிதாக பொறுப்பெற்றுள்ள ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பது ஆத்தூர் ஊராட்சி பகுதி மக்களின் விருப்பமாகும்.
- ரகுநாத்
நடவடிக்கை எடுக்குமா அரசு.
It than truth or fake