தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் ! : கைதாகிறாரா வடிவேலு ?
காமெடி நடிகர் வடிவேலு கடைசியாக கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் எலி. இந்தப்படம் வெளிவந்து எதிர்பார்த்த அளவுக்கு வசூல் சாதனை படைக்காததால் இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் மிகப்பெரிய நஷ்டம் அடைந்தார்.
தமிழகத்தில் மட்டுமல்லாதுஉலகத் தமிழர்கள் அனைவருக்கும் வடிவேலுவின் காமெடிதான் அவர்களின் கவலைகளுக்கு மருந்தாகஇருக்கிறது. வடிவேலுவை பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. அதனால் வடிவேலுவை வைத்து படம்எடுத்தால் பெரிய அளவுக்கு பணமும், புகழும் சம்பாதிக்கலாம் என்ற கனவுகளோடு சினிமா எடுக்கவந்த தயாரிப்பாளர் சதீஷின் கனவுகள் அனைத்தும் உடைந்து சுக்குநூறாகிப் போனது. தான் சம்பாதித்தபணம் அனைத்தும் எலி படத்தின் மூலம் இழந்து தற்போது கடனாளி ஆனதுதான் மிச்சம்.
எலி படத்தில் வடிவேலு வங்கி ஒன்றில் அத்துமீறி உள்ளே நுழைந்து வங்கியின் மேலாளர் பணம் தராவிட்டால் சுட்டுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்து மிரட்டுவார்.
அதேபாணியில் வடிவேலுவின் சகோதரர் என்று சொல்லி சில தினங்களுக்கு முன் எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமாரின் வீட்டிற்குள் அடியாட்களுடன்அத்துமீறி உள்ளே நுழைந்து கலாட்டா செய்து வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் அடித்துநொறுக்கி துவம்சம் செய்திருக்கிறார்கள். அப்போது சதீஷ்குமார் சொந்த வேலை காரணமாக சென்னைசென்றிருக்கிறார். அவரின் குடும்பத்தினரும் அவரது அலுவலக ஊழியர் ஒருவர் மட்டுமே வீட்டில்இருந்திருக்கிறார்கள். வடிவேலுவின் தம்பி மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டிஇருக்கிறார். உடனே அங்கு இருந்த சதீஷ்குமாரின் அலுவலர் கோவிந்தராஜ் முதலாளி இல்லாதபோது இங்கு வந்து அநாகரீகமாக ஏன் நடந்து கொள்கிறீர்கள். என்று கேட்டதுதான் தாமதம்.உடனே அவரை கீழே தள்ளி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பணத்தை ஒரு வாரத்தில்கொடுக்காவிட்டால் தண்ணீர் லாரியை வைத்து சதீஷ்குமாரை கொல்ல சொல்லிவிட்டார் எனது அண்ணன் வடிவேலு என்று ஆவேசமாக பேசி கோவிந்தராஜின் கழுத்தை நெரித்திருக்கிறார்கள். தான் அங்கிருந்துஉயிர் தப்பினால் போதும் என்று கோவிந்தராஜ் சத்தமிட அக்கம்பக்கத்தினர் கூடியதால் வடிவேலுவின்தம்பி மணிகண்டனும் அவருடன் வந்த அடியாட்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.
அதன்பிறகு பாதிக்கப்பட்டகோவிந்தராஜ் E-1 K புதூர் காவல்நிலையத்தில்புகார் செய்திருக்கிறார். காவல்துறையினரும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில்இருந்த காட்சிகளைப் பார்த்தும், விசாரித்தும் நடந்த சம்பவத்தை ஊர்ஜிதப்படுத்தி நடிகர்வடிவேலுவின் தூண்டுதலில் அவரது தம்பி மணிகண்டன் மற்றும் அவருடன் வந்தவர்கள் மீது ஜாமீனில்வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினால் வாக்குமூலத்தின் அடிப்படையில் சினிமாவில் அனைவரையும் சிரிக்க வைக்கும் நடிகர் வடிவேலு சிறந்த காமெடியனாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் வில்லனாக இருக்கும் வடிவேலுவும் கைது செய்யப்படலாம் என்று அப்பகுதியினர் பேசி வருகின்றனர்.