30 முறை ஜெயிலுக்கு போயிருக்கேன் : உதயநிதியை கலங்கவைத்த நாராயணா தாத்தா
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தி.மு.க சார்பில் கடந்த 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தப்போராட்டத்தில் ஓசூரை சேர்ந்த 85 வயது முதியவர் நாராயணப்பா கலந்துக்கொண்டார். இந்தப்போராடத்தில் நாராயணப்பா கவனம் ஈர்த்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், நாராயணப்பாவை அண்ணா அறிவாலயத்திற்கு அழைத்துப் பேசினார். அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பகிர்ந்திருந்தார்.
இந்த சந்திப்பின் போது கருணாநிதியின் சிறிய சிலையொன்றையும், புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்தார். “நாராயணப்பாவின் கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு ஏற்பட்டதாக ஸ்டாலின் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாராயணப்பாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், “நான் மேயரால்லாம் வரமாட்டேன்’னு பேப்பர்ல சொல்லாதீங்க, நீங்க மேயரா வரனும் நான் உங்களுக்காக பிரச்சாரம் செய்ய வருவேன் என்கிறார் நாராயணப்பா. எங்க இருந்து வர்றீங்க என உதயநிதி கேட்க, ஓசூர் சமத்துவபுரத்தில் இருக்கேன். போராட்டத்துக்காக ரயில் மூலம் சென்னை வந்தேன் என்றார். எப்பவுமே தனியா தான் வருவேன். உங்களையும் தலைவரையும் பார்த்ததே போதும்.
என் படம் எல்லாம் பார்த்து இருக்கீங்களா எனக் கேட்க, ‘உங்க எல்லா படங்களையும் பார்த்துடுவேன். நீங்க மேயர் எலெக்ஷன்ல நிக்கும்போது நான்தான் இங்கவந்து உங்களுக்காக வேலை செய்வேன். உங்க கார்டு கொடுங்க அடிக்கடி மெட்ராஸ் வருவேன் அடுத்தமுறை வரும்போது கர்நாடகா அவரைக்காய் எடுத்துட்டு வர்றேன். எல்லா போராட்டங்களையும் கலந்துக்குவேன். 30 தடவைக்கு மேல ஜெயிலுக்கு போயிருக்கேன். இப்ப கூட போலீஸ்காரங்க கிட்ட என் மேல வழக்கு போடுனு சொல்லிட்டேன்” என்கிறார். இந்த பிணைப்புதான் திமுக என்ற வாசகத்தோடு உதயநிதி ட்வீட் செய்துள்ளார்.