இந்த சங்கத்தில் இணைய வேண்டாம்…
புதுவருடம் பிறக்க இருக்கும் சமயத்தில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பல்வேறு சங்கங்களும் உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கும் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். இவர்களுக்கு சற்று மாற்றாக சந்தா வசூலே செய்யாத பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரை நாம் சந்தித்தபோது அவரது சிந்தனையும், செயல்பாடுகளும் நமக்கு வியப்பாக இருந்தது.
அவர் நம்மிடம் கூறுகையில், யாரை யார் குறை கூறுவது? சாதாரண மக்கள் மத்தியில் குறை என்பது, சாதாரணமான நிகழ்வுகள் தான். ஆனால், பத்திரிகையாளர்களை குறை சொல்ல தகுதி வேண்டும். பொதுவாக யாராவது குற்றம் சாட்டினால், அது பிறரை குறை கூறுவதாக கருதப்படும். பத்திரிகைகளில் வந்தால், அது செய்தி. தங்களது செயல்பாடுகளை பொது மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என பல கட்சிகளும், ஜாதி சங்கங்களும் பல சமூக சேவை அமைப்புகளும் ஊடகத்துறையில் நுழைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் செய்தியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, ஊடகத்துறையை அறியாத பலர் பத்திரிகையாளர் சங்கம் ஆரம்பித்து, உறுப்பினர்களிடம் பணம் வசூல் செய்து வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக செயல்பட்டும், செயல்படாமலும், யார் தலைவர் என முடிவு செய்யப்படாத நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களும், ஊடகத்துறையை அறியாத, சார்ந்திராத பலருக்கும் உறுப்பினர் அட்டை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதற்கெல்லாம் முடிவுகட்டும் விதமாக உருவானது தான், ஊடக உரிமைக்குரல் என்ற பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு சங்கம். இதில் ஊடகத்துறையில் இல்லாதவர்கள் உறுப்பினராக முடியாது. உறுப்பினர்களின் அடையாள அட்டைகளுக்கு ரூ 10/- மட்டும் வசூலிக்கப்படுகிறது. ரூபாய் ஐநூறுக்கும், ஆயிரங்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் சங்கம் இது அல்ல. மேலும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்த சங்கத்தில் உறுப்பினராக இணைய, பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், போலியானவர்கள் இணைய முடியாது. போலியான அடையாள அட்டையை வைத்து, ஊடக உரிமைக்குரல் சங்கத்தில் யாரும் இணைய வேண்டாம். யாரையும், இணைக்கவும் வேண்டாம். ஏனென்றால், போலிகளை களையெடுப்பதே, ஊடக உரிமைக்குரல் சங்கம் தான்.
உண்மையான பத்திரிகையாளர்களை மட்டும் இணைத்து, அவர்கள் நலனுக்காக போராட, உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். மூத்த பத்திரிக்கையாளர்கள் வாழ்வு சிறக்க பாடுபட வேண்டும். இளைய தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நிதியுதவி வழங்க வேண்டும் என உறுதியுடன் செயல்பட்டு வரும் சங்கம் தான் ஊடக உரிமைக்குரல்.